பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பாளையங்கோட்டை சம்பவத்தைப்பற்றி வைக்கப்பட்ட நீதி விசாரணையில் நீதிபதி என்ன அறிக்கை தந்திருக்கிறார்கள் என்பதைப் படித்துக் காட்டினேன். அந்தச் சம்பவத்திலே சில அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற குறிப்பு இருந்து அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் சொன்னேன். லூர்துநாதன் சம்பவத்திற்குப் போலீசார் காரணம் அல்ல, அவன் ஓடுகின்ற நேரத்தில் ஆற்றிலே விழுந்து இறந்து விட்டான் என்று நீதிபதி சொன்ன குறிப்பையும் படித்துக் காட்டினேன். இதைப் போலவே இன்றைக்கு இருக்கின்ற ஆளும் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றாக இருந்த நேரத்திலே ஏற்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழக சம்பவம், உதயகுமார் சாவு. அந்த நேரத்திலே அந்த சாவைப்பற்றி எதிர்க்கட்சிக்காரர்கள் பேசிய நேரத்தில் அதற்கு தகுந்த பதில் அளித்துக் கொண்டிருந்தவர் இன்றைக்கு எதிரிலே வீற்றிருப்பவர்.

அந்த அண்ணாமலைப் பல்கலைக் கழக சம்பவத்திற்கு நீதி விசாரணை வைக்கப்பட்டு உதயகுமார் சாவுக்கு காவல் துறையினர் பொறுப்பு அல்ல, மற்ற சம்பவங்களுக்கு நீதிபதியின் குறிப்பு அடங்கிய அறிக்கையைப் படித்துக் காட்டினேன். அந்த அறிக்கை அப்பொழுதே அவையிலே வைக்கப்பட்டது. கிளைவ் ஹாஸ்டல் சம்பவத்தில் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டார்கள், அங்கே உள்ள பஸ் தொழிலாளர்களும், போலீசாரும் சேர்ந்து கொண்டு மாணவர்களை அடித்தார்கள் என்ற வகையிலே நீதிபதியின் முடிவு அறிக்கையின் சார்பில் வெளியிடப்பட்டது. அதையும் சொல்லியிருக்கிறேன். இவ்வளவுக்கும் பிறகும் திரும்பத் திரும்ப உதயகுமார், லூர்துநாதன், கிளைவ் ஹாஸ்டல் என்று பேசிக் கொண்டிருப்பது அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த பிறகும் அல்லது விளக்கியதற்குப் பிறகும் முறையாகாது என்பது என்னுடைய எண்ணம்.

நான் கேட்பதெல்லாம் மதுரையிலே நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சிக்கு ஏன் நீதி விசாரணை வைக்கக் கூடாது