418
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
முதலமைச்சராக இருந்த கருணாநிதி பவனி வருவது என்றும் ஒரு திட்டம் போடப்பட்டது, அந்தக் காரணத்தால்தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது என்றெல்லாம்கூட இங்கே சில உறுப்பினர்கள் காரணங்களை எடுத்துச் சொன்னார்கள். திருத்தணி ரதம் எப்படிப்பட்டது என்பதைப்பற்றி மாண்புமிகு ப.உ. சண்முகம் அவர்கள் விளக்கிச் சொன்னார்கள். அதிலே அங்கே உள்ள உற்சவ மூர்த்தியை மட்டும்தான் வைக்க முடியும். அதுவும் தங்க ரதம் என்றால் திருவாரூர் பெரிய தேர் போல நிச்சயமாக இருக்காது. அப்படிப்பட்ட ஒரு தேரைச் செய்வதற்கு எவ்வளவு தங்கம் வேண்டுமென்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படி தங்க ரதங்கள், தங்க வாகனங்கள் இப்படிப்பட்ட விழாக்களுக்குக் கொண்டு வரப்படுவது தவறும் இல்லை, அதற்கு முன்மாதிரியும் இருக்கிறது. இங்கு அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த உலகத் தமிழ் மாநாட்டிற்குப் பல ஆலயங்களிலிருந்த வெள்ளி ரிஷப வாகனங்கள், தங்க ஆட்டுக்கடா வாகனங்கள், வெள்ளி யானை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அந்த யானை வாகனத்திலே அண்ணா அவர்களோ, ரிஷப வாகனத்திலே நானோ அல்லது ஆட்டுக்கடா வாகனத்திலே பேராசிரியர் அன்பழகன் அவர்களோ உட்கார்ந்து கொண்டு எப்படி ஊர்வலத்திலே உலகத் தமிழ் மாநாட்டிலே செல்லவில்லையோ அதைப் போல எப்படி அந்த வாகனங்கள் பெரிய லாரிகளிலே வைத்து காட்சிப் பொருளாக ஊர்வலத்திலே எடுத்துச் செல்லப்பட்டனவோ அதைப்போல திருத்தணி ரதமும் ஊர்வலத்திலே எடுத்துச்செல்லப்படலாமா என்று அப்பொழு திருந்த அரசால் யோசிக்கப்பட்டதேயல்லாமல், ஏதோ தங்க ரதத்தைக் கொண்டு வந்து கருணாநிதி பவனி போக வேண்டுமென்ற முயற்சி ஏற்பட்டது என்று அதையும் சதித் திட்டம் போல வெளியிட்டார்கள்.
நல்ல வேளை, அதற்கு ஒரு ‘307' போடப்படவில்லை யென்கின்ற வகையிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதைப் போன்ற குற்றச்சாட்டுக்கள் திராவிட முன்னேற்றக் கழக அரசு பற்றி இங்கே பேசிய நண்பர்களால் சுமத்தப்பட்டதேயல்லாமல்