பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

423

என்னுடைய முன்னுரையில் இந்திரா ா காந்தி அவர்களுடைய தமிழக வருகையைப் பற்றியும், அப்போது நடைபெற்ற சில சம்பவங்களைப் பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்திருந்தேன். அதைப்பற்றி என்னுடைய அருமை நண்பர், காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மாரிமுத்து அவர்கள் மிகத்தெளிவாக, விரிவாக - இப்போது இசை விழா நடக்கின்றது, அதையொட்டி சொல்ல வேண்டுமானால், விஸ்தாரமாக (குறுக்கீடு) நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் சாங்கோபங்கமாக எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் சென்னையிலே வந்து இறங்கியதிலிருந்து, மதுரைக்குச் சென்று பிறகு திருச்சி வந்தடைந்து, காஞ்சிக்குள் நுழைந்ததிலிருந்து மீண்டும் சென்னைக்கு வந்தது வரையில் அவர்கள் எடுத்துரைத்தது; திராவிட முன்னேற்றக் கழகம் பெரியதொரு வன்முறையில் இறங்கிவிட்டது. மதுரை சம்பவத்தை நான் நேரில் பார்த்தேன். திராவிட முன்னேற்றக் கழகம்தான் இதற்கெல்லாம் காரணம் என்றுகூட எடுத்துச் சொன்னார்கள்.

காலையிலே பேசிய எங்கள் துணைத் தலைவர் பேராசிரியர் அவர்கள் பேசுகிற நேரத்திலே குறிப்பிட்டார்கள், அங்கே முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் போலீஸ் அதிகாரிகளை அணுகி - ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் அதை முதலமைச்சர் அவர்கள் விசாரிக்கக் கடமைப்பட்டிருக் கிறார்கள் என்பதற்காக சொல்லுகிறேன் - அங்கே முன்னேற்றக் கழகத்தினர் போலீஸ் அதிகாரிகளை அணுகி இந்திரா காந்தி வருகிறபோது நாங்கள் கறுப்புக்கொடிக் காட்டுவதாக இருக்கிறோம். எனவே அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுங்கள் - போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுங்கள்- நாங்கள் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பது எங்களுடைய கடமை என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது அந்த போலீஸ் அதிகாரி நான் சில கான்ஸ்டபிள்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஏதோ 50, 60 பேர்கள் கருப்புக்கொடி காட்டப்போவதாக என்று எண்ணிக்கொண்டு சில கான்ஸ்டபிள்களை அனுப்பி வைப்பதாக அதிகாரிகள்