பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

427

இங்கே வன்முறையை திராவிட முன்னேற்றக் கழகம் தூண்டவில்லை; திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தான் வன்முறை தூண்டப்பட்டது. ஆளுங்கட்சிக்காரர்கள் தங்களுடைய முழு பலத்தையும் காட்டி, இனிமேல் யாரும் இங்கேயிருக்கின்ற ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகளில் ஈடுபடக் கூடாது என்ற வகையில், இந்திரா காந்தியினுடைய வருகையைப் பயன்படுத்திக்கொண்டு வன்முறை பிளான் செய்யப்பட்டது என்று சொல்லுகின்ற அளவுக்கு, வன்முறை, அடக்குமுறை இவைகளில் ஈடுபட்டார்கள் என்பதுதான் எங்களுடைய குற்றச் சாட்டாகும். நாங்கள் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படு கிறதோ அல்லது அகற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறதோ, அந்த இடத்தில் நடைபெற்றது என்ன? சென்னை மாநகரத்தில், இந்திரா காந்தி வருவதாக ஒரு வழி சொல்லப்பட்டது. ஆனால் காஞ்சிபுரத்திற்கு அந்த அம்மையார் செல்ல பூவிருந்தவல்லி வழியை விட்டுவிட்டு வேறு வழியாக அழைத்துச்செல்லப் பட்டார்கள், அப்படி பூவிருந்தவல்லி வழியாகச் செல்லுவதாக இருந்தது ரத்து செய்யப்பட்டது என்று அங்கே உள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்டதும், பூவிருந்த வல்லி தோழர்கள் கறுப்புக் கொடி காட்டுவதற்கு அந்த அம்ைைமயார் அந்தப் பக்கம் வரவில்லை என்றதும், யார் மீதும் கல் எறிந்ததாகவோ, யாரும் வன்முறைக்கு இடம் கொடுத்தார்கள் என்றோ, எந்தச் செய்தியும்கிடையாது. அமைதியாகக் கலைந்து சென்றார்கள். அந்த அம்மையார் அந்த வழியாக வரவில்லை என்று அறிவிக்கப்பட்ட காரணத்தால், அதைப்போல சென்னையில் கிண்டி பகுதியில் அந்த அம்மையார் அந்த வழியாகச் செல்லவில்லை என்று அறிவிக்கப்பட்டதா என்றால் அறிவிக்கப்படவில்லை. அங்கே கூடியிருந்த மக்கள் கூடுகின்ற வரையில் அனுமதிக்கப்பட்டார்கள். பிறகு தடியடி, கண்ணீர்ப் புகைப் பிரயோகம், துப்பாக்கிப் பிரயோகம், 2 பேர் மாண்டார்கள் என்ற செய்தி வருகிறது.

அந்தச் செய்தியைத் தொடர்ந்து கறுப்புக்கொடி நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கின்ற சீதாபதி, வீராசாமி, நீல நாராயணன் இவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்தி வருகிறது.