கலைஞரின் சட்டமன்ற உரைகள்
429
இருக்கிற விஷயமாக இருந்தால், சப்ஜுடீஸ் என்பதால் அதில் நுழைவது தவறாக இருக்கலாம். நான் பொதுப்படையான விஷயங்களைச் சொல்லுகிறேன். நிலைமையைச் சொல்லுகிறேன். எங்களுடைய காரை சுற்றி கண்ணீர்ப் புகை வெடிகள் வெடித்துக் கொண்டிருந்தன.
மாண்புமிகு பேரவைத் தலைவர் : பிரச்சினை வழக்கு மன்றத்திற்கு சென்றிருப்பதைப்பற்றி நீதி விசாரணையில் இருப்பதையொட்டி பேசக்கூடாது என்பதுதான் பொதுவான
மரபு.
மாண்புமிகு திரு. சி. பொன்னையன் : தலைவர வர்களே, இது பற்றி கிரிமினல் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதால், இந்த விஷயங்கள் இங்கே கூறப்படக் கூடாதுதான்.
கலைஞர் மு. கருணாநிதி : கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எப்.ஐ.ஆர். என்ற நிலையில் பேசலாம் அதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று அமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வேண்டுமானால் நாளை ஆராய்ந்து அதைத் தலைவர் தீர்ப்புச் சொல்லலாம்.
THIRU. R. MARGABANDU F. I. R.: has been filed and investigation is going on and it will hamper investigation. So it is subjudice.
மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன் : தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் இதைப்பற்றி சிந்தித்து என்ன முடிவு பெறவேண்டுமோ அதை நாளை மறுதினம் தரலாம் என்கிறார்கள். அதுவரையில் இதைப்பற்றி செய்தி ஏடுகளில் வராமல் இருந்தால்தான் தலைவர் தீர்ப்பு என்ன என்பது சரியாக அமையும். ஏனெனில் தலைவர் தீர்ப்பு வரட்டும் என்று சொல்லும்பொழுது தீர்ப்பு வருகிறவரையில் இந்தப் பிரச்சினை வெளிவர வேண்டாம் என்பதுதான். அதையொட்டிய தீர்ப்பு வந்த பிறகு அனுமதிக்கலாம் என்றால் பத்திரிக்கையில் வரலாம்.