பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

437

கு பொருளாளராக இருக்கும்போது பேசப்பட்டது - அதைத் தான் பிறகு குற்றச்சாட்டுகளாக வடித்துக் கொடுத்தேன். அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து எதிர்க்கட்சிக்காரர்கள் நிரபராதிகளாக மீண்டு வருவார்களேயானால் மெத்த மகிழ்ச்சியடைவேன் என்று மிக உருக்கமாக நமது முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள்.

அப்படிச் சொல்லும்போது எனது உள்ளத்தைக்கூட தொடும் அளவுக்கு, பழைய கால எண்ணங்கள் நெஞ்சைத் தொடுகிற அளவுக்கு இருந்தது. ஆனால், நெஞ்சில் குத்திவிட்டு, எப்படி அது உயிர் பிழைக்க வேண்டுமென்று சொல்வதைப் போல, குற்றச் சாட்டுக்களை அடுக்கடுக்காக அள்ளித் தந்து விட்டு, அதுவும் நீதிபதியிடத்தில் தந்துவிட்டு, குற்றச்சாட்டுகள் போதாது என்று மீண்டும் மதுரைக்கு வந்த இந்திரா காந்தியாரிடத்தில் சொல்லப்பட்டது. மகஜர் தயாரித்து, ரெயிலில் சென்று, ரெயில் தாமதமான காரணத்தால், போய்ச் சேர முடியாமல், விமானத்தில் பறந்து இந்திரா காந்தியிடத்தில் கொடுத்து 54-க்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை, கருணாநிதி, நெடுஞ்செழியன், சாதிக் பாட்சா, ப.உ. சண்முகம், அன்பில் தர்மலிங்கம், மாதவன், இப்படி பல அமைச்சர்களை அதிலே ஈடுபடுத்தி, இவர்கள் எல்லாம் ஊழல் புகாருக்கு உள்ளான வர்கள். லஞ்ச ஊழல் பேர்வழிகள் என்று நெஞ்சில் குத்திவிட்டு நாங்கள் துடிதுடித்துக்கொண்டிருக்கிற நேரத்தில், மூச்சு போய்கொண்டு இருக்கிற நேரத்தில், குத்தியவர் எதிரில் வந்து, நான் குத்தியது உண்மைதான். நீ எப்படியாவது பிழைத்துக் கொண்டால் மகிழ்ச்சி அடைபவர் என்னைவிட வேறு யாரும் இருக்க முடியாது என்று சொல்வதைப்போல, எனது இனிய நண்பர், புரட்சித் தலைவர், மாண்புமிகு அமைச்சர் அவர்கள், 'நீங்கள் நிரபராதிகளாக வந்தால் மகிழ்ச்சி அடைவோம்' என்று சொல்கிறார் என்று எண்ணுகிறேன்.

கல்

அந்தக் குற்றச்சாட்டுகள் யாரால், எப்படி தயாரிக்கப் பட்டன? எனக்குத் தெரியும். இப்போது சொன்னார்கள். கவர்னர் மாளிகையில் ஆட்கள் இருக்கிறார்கள். இப்படித் தகவல்கள் வருகின்றன, என்று. கழக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த