பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நேரத்திலே, மத்திய அமைச்சர்கள் சிலர் இங்கே உள்ள அவர்களுடைய ஆட்களைப் பயன்படுத்திக் கொண்டு, இங்கே இருக்கிற பைல்களை எல்லாம் தேடிப் பிடித்து, எந்தக் குற்றச் சாட்டில் சிக்க வைக்க முடியும் என்று குற்றச்சாட்டுகளை தயாரித்து அவைகளை நம்முடைய இன்றைய முதலமைச்சரிடத் திலேயும் வேறு சிலரிடத்திலேயும் தந்து கையெழுத்துக்களைப் பெற்றார்கள். அந்தக் குற்றச்சாட்டுகள் அங்கே சென்றன. அந்தக் குற்றச்சாட்டுகள் அங்கே போனபோது நம்முடைய மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் திட்டவட்டமாக எழுதிக் கொடுத்தார். "This Petition is written by me with all responsibility and

sense of duty...........

என்று. அதற்குப் பிறகு சர்க்காரியாவுக்கு தந்த அபிடவிட் வாக்குமூலத்தில்

"I Most respectfully submit that it is absolutely true. I have no personal knowledge........".

சொன்ன சங்கதி அத்தனையும் உண்மையா என்று எனக்கு ஒன்றும் நேரடியாகத் தெரியாது என்று சொன்னார். இங்கே ரகுமான்கான் இளித்தவாயன் கிடைத்து விட்டான். பொறுப் பேற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்பேற்றுக்கொண்டு எழுதித்தர வேண்டுமென்று கேட்கின்றார்கள். அப்படிக் கேட்கிற முதலமைச்சர் அவர்கள் குடியரசுத் தலைவருக்கும் எங்களைப் பற்றி எழுதிக் கொடுத்த மனுவில்

"This Petition is written by me with all responsibility and

sense of duty.......

என்று எழுதிக் கொடுத்துவிட்டு, சர்க்காரியா கமிஷன் வந்ததும் அதில் எழுதிக் கொடுக்கிறார்.

To 400 db 127

..I have no personal knowledge about this"

என்று எழுதிக் கொடுக்கிறார்.

இந்த சர்க்காரியா கமிஷன் விசாரணையின் போது, இன்று மனம் உ உருகப் பேசினாரே, எண்ணிப்பார்க்க வேண்டும்,