பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

441

அது அவர்களுடைய முடிவுரை. அடுத்ததாக, 'Loan to the fa- ther-in-law of Thiru S. Kandappan'

அதில் என்ன முடிவுரை தெரியுமா?

"Shri Madhavan, the then Minister for Industries, has exercised pressure on the officials of the Corporation at the time of the sanction and disbursement of the loan as well as for delaying the follow-up action on the Board's Resolution of foreclosure.......

11

இது சர்க்காரியாவின் முடிவுரை. இந்த இரண்டு பேர்கள் மீதுதான் குற்றச்சாட்டுகளை அவர்கள் கண்டுபிடித்து வெளியிட்டிருக் கிறார்கள்.

அடுத்து, க்ளோப் தியேட்டர். க்ளோப் தியேட்டர்பற்றிச் சொல்லும்போது,

99...It has not been established beyond all manner of doubt that the Respondent had received any illegal gratification from Shri Varadaraja Pillai.......

என்பது முடிவுரை.

11

கா

அடுத்தபடியாக, திரு. ஏ. எஸ். ஸ்ரீனிவாசன், மறைந்து விட்டார், பாவம். அவர்பேரில் புகார் கொடுத்தது நம் முதல் அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் அந்தப் புகாரில் இருந்தது. அதற்குக் கூட

"This part of the allegation has thus not been substantiated........"

அதாவது நிரூபிக்கப்படவில்லை.

அடுத்து, ப்ராட்வே டைம்ஸ் பத்திரிகை மீது ஒரு வழக்கு போடப்பட்டது. பிறகு அந்த ஆசிரியர் வருத்தம் தெரிவித்த பிறகு வாபஸ் பெறப்பட்டது. அது உண்மைதான் என்று சர்க்காரியா சொல்கிறார்கள்.

oga