பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சந்தேகம் எனக்கு வருகிறது. . . . முன்னால் உள்ள ரூலிங்கை வாசிக்கிறேன். .

more You should not refer to any matter on which a judicial decision is pending. The matter has been referred for judicial decision. You are a Doctor. You may not know the Law of Contempt, which operates not from the moment the case starts, but from the moment the possibility of a judicial enquiry arises. என்று டாக்டர் ஹாண்டே எழுப்பியதற்கு ரூலிங் கொடுக்கப் பட்டிருக்கிறது

The Law of Contempt with which we are now concerned starts from the time when the possibility of the enquiry arises and the possibility has already arisen.

அதனால் ஜூடிஷியரி என்கின்ற நிலைக்கு போக இருக்கக்கூடிய வைகளைப்பற்றி நாம் பேசக்கூடாது என்றும், ஜூடிஷியரிக்கு போகக்கூடிய விவகாரம் என்கின்ற நிலை இருந்தால்கூட நாம் அதைப்பற்றி பேசக்கூடாது என்று இருக்கிறது, அதைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி : அதனால்தான் நான் குறிப்பிட்டேன், இதில் அமைந்திருக்கின்ற சாட்சியம், அதுபற்றிய விவரங்களை எல்லாம் நான் சொல்லவில்லை. எந்தெந்தக் குற்றச்சாட்டுகள் அவற்றிலுள்ள தவறுகள் என்ன என்று விசாரித்த சர்க்காரியா கமிஷன் தந்த அறிக்கை 26 ரூபாய்க்கு புத்தகமாக அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது. அப்படி விற்பனை செய்யப்படுகின்ற புத்தகத்திலுள்ள தகவலைத்தான் தந்தேனே அல்லாமல் வேறு எதுவும் அல்ல.

கா இப்படிப்பட்ட பெரிய குற்றச்சாட்டுக்களை சாட்டிய வர்கள், தங்களுடைய ஆட்சி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலாக, சொல்லபட்ட குற்றச்சாட்டுக்களையே திரும்பத் திரும்ப அதையே எங்கள் மீது சுமத்திக்கொண்டு, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு ஊழல் ஊழல் என்று கூறி, நாங்கள் எல்லாம்