கலைஞரின் சட்டமன்ற உரைகள்
445
உத்தமபுத்திரர்கள் என்று தங்களை கூறிக்கொள்கின்ற நேரத்தில், ஒன்றை மறந்துவிடக்கூடாது.
-
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரிடத்திலும், ஜனாதிபதியிடத்திலும் ஆளுநர் அவர்களிடத்திலும் ஒரு மகஜரை தந்திருக்கிறார்கள். இந்திரா காந்தியின் காக்கஸ் அமைப்பில் சுதிர்சரீன் என்பவர் யஷ்பால் கபூரின் உறவினர் மாப்பிள்ளையின் தம்பி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நேரத்தில் - 45 இலட்சம் ரூபாய் தமிழ்நாட்டுக்கு வருகிறது. இதில் 25 இலட்சம் ரூபாயை சுதீர்சரீன் இங்கு வந்து செக் மூலமாக தருகிறார்.
—
அது மாற்றப்படுகிறது. பிறகு 20 லட்சம் ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக வருகிறது. அப்படி வந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியவில்லை. உடனே, டெல்லிக்குத் தகவல் பறக்கிறது சென்னையிலே இருந்து. அங்கேயிருந்து சென்னையிலே உள்ள ஜார்ஜ் டவுனிலே உள்ள தேசீய மயமாக்கப்பட்ட வங்கியோடு தொடர்பு கொள்ளுங்கள். அங்கே இந்த 20 இலட்சம் ரூபாய்க்கான ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மாற்றிக் கொள்ளலாம் என்கின்ற ஆலோசனை பிறப்பிக்கப் படுகிறது. உடனடியாக அந்த வங்கிக்குச் செல்கிறார்கள். 20 லட்சம் ரூபாய்க்கான ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சின்னச் சிறு நோட்டுக்களாக அங்கே மாற்றப்படுகின்றன. இதைப்பற்றி ஒரு புகார். இதிலே யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், யாருக்கு அந்தப் பணம் அனுப்பப்படுகிறது என்கிற புகார் உள்துறை அமைச்சர், பிரதம அமைச்சர், கவர்னர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திட்டு தரப்பட்டிருக்கின்றது. எனவேதான், பொதுத் தேர்தலிலே இப்படி 45 லட்சம் ரூபாய் பேரம் நடத்திவிட்டு, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது ஊழல், ஊழல் என்று பேசுகின்ற மாண்புமிகு உறுப்பினர்கள் தங்கள் நெஞ்சில் கையை வைத்துப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
ம்