446
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அது மாத்திரமல்ல, 'பாவா' என்ற ஒருவரோடு லட்சக்கணக்கான ரூபாய்க்கு இங்கேயும், அங்கேயும் பேரம் நடைபெற்றிருக்கிறது. அந்த பாவா என்பவர் யார் என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் வெளிவரத்தான் போகின்றன. எனவே, ஊழலைப் பற்றிப் பேசுகின்றவர்கள், நாணயம், நேர்மை ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றவர்கள், ஏற்கனவே இருந்த கழக ஆட்சி நேர்மையற்றது, நாணயமற்றது என்று பேசுகின்றபோது இவைகளையெல்லாம் மனதிலே வைத்துக்கொள்ள வேண்டு மென்று சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எடுத்துக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
18
வெங்கடாத்திரி கமிஷனைப் பற்றி காலையிலே சொன்னார்கள். அந்த வெங்கடாத்திரி கமிஷன் அமைக்கப் படுகிறது. விசாரணையும் நடக்கிறது. அப்படி விசாரணை நடக்கும்போது, புகாரைக் கொடுத்தவரைக் காணவில்லை என்று சொன்னார்கள். இந்த மாதிரி புகாரைக் கொடுக்கின்றவர்கள், காணாமல் போவது தமிழ்நாட்டிலே சகஜம். அப்படிப் புகாரைக் கொடுக்கின்றவர்கள் விசாரணைக்கு வரமாட்டார்கள். அதுபோல் அவர்கள் வராவிட்டாலும், சர்க்காரியா கமிஷன் விசாரணை நடைபெற்றது. அதைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை. புகாரைக் கொடுத்தவர்கள் நேரில் வராமல் போனாலும், கமிஷன் விசாரணை நடக்கும். அந்த முறையிலே வெங்கடாத்திரி கமிஷன் விசாரணை நிற்கலாமா? ஒரு சாட்சி விசாரிக்கப்பட்டுவிட்டார் என்று வெங்கடாத்திரி குறிப்பு அனுப்பிற பிறகு, அது பென்டிங்கில் இருக்கின்ற நேரத்திலே, சட்டமன்றத்திலே அந்தச் சட்டத்தை ரத்து செய்கிறார்கள் என்றால், ஒரு அமைச்சரைக் காப்பாற்றுவதற்காக இப்படிப்பட்ட காரியம் நடைபெறுகிறது என்று நாடு எண்ணாதா?
B
TOL
புதுக்கோட்டையிலே, மாவட்ட ஆட்சித் தலைவர் வெள்ள நிவாரண வேலைகளுக்காக, கட்டாயப்படுத்தி பணம் வசூலித்தார் என்று.
月
மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன் : மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, ஜஸ்டிஸ் ஜஸ்டிஸ் வெங்கடாத்திரி கமிஷனிலே புகார் சொன்னவர் இருக்கின்றாரா என்பதே