பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

00% இன்னொன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். காலையில் பேராசிரியரும் குறிப்பிட்டார். ஆளும் கட்சியின் சார்பாகத் தவறே நடைபெறவில்லை என்று எண்ணிக் கொண்டிருக்காதீர்கள்; அவை எல்லாம் வெளிவரும் காலம் அண்மையில் இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். நான் ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

-

விசைத்தறிகளுக்கு நார்ப்பட்டு விநியோகம் செய்யப் படுகிறது. அந்த விநியோகத்தை முன்பு தமிழ்நாடு ரீஜினல் கமிட்டி செய்தது. இப்போது இவ்வளவு கொடுக்கலாம் என்று தமிழ்நாடு ரீஜினல் கமிட்டி ஒதுக்கீடு செய்கிறது. இத்தனை கதிர் உள்ளவர்களுக்கு இவ்வளவு கிலோ நார்ப்பட்டு கொடுக்கலாம் என்று நிர்ணயிக்கிறது. டெக்ஸ்டைல்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன், காந்திபுரம், குமாரப்பாளையம் முன்பு ரீஜினல் கமிட்டி அதற்கு மூன்று மாதத்திற்கு செய்த அலாட்மென்ட் 700 கிலோ. அப்படியானால் ஒரு மாதத்திற்கு 234 கிலோ சுமாராக. இதுதான் தரலாம் என்று முன்பு சிபாரிசு செய்தது, தமிழ்நாடு ரீஜினல் கமிட்டி. ஒரு மாதத்திற்கு 234 கிலோ நூல் தரலாம் என்று சிபாரிசு செய்கிறது.

ஆனால் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆப் ஹாண்ட்லூம்ஸ்- ஏ.டி.எச். ஒரு மாதத்திற்கு இப்போது அந்த அசோசியேஷனுக்கு ஒதுக்கியது எவ்வளவு தெரியுமா? 2,780 கிலோ. 234 கிலோ ஒதுக்கலாம் என்ற நிலை எங்கே? ஏ.டி.எச். ஒரு மாதத்திற்கு ஒதுக்குகிற 2,780 கிலோ எங்கே? 2,546 கிலோ ஒவ்வொரு மாதத்திற்கும் அதிகமாக்கப்பட்டிருக்கிறது, மாதந்தோறும். அவர்கள் கேட்டதைவிட, அவர்களுக்கு உரியதைவிட அதிகமாக ஒதுக்கப்பட்டது. 2,546 கிலோ. கன்ட்ரோல் விலைக்கும் வெளி மார்க்கெட் விலைக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்துப் பார்த்தால் ஒரு கிலோவுக்கு ஆறு ரூபாய் லாபம் வருகிறது. ஒரு மாதத்திற்கு அந்த குமாரப் பாளையம் அசோசியேஷனுக்கு 2,547x6=15,282 ரூபாய் லாபம் தரும். இது குமாரபாளையம் சம்பவம்.

சேலத்தில், சேலம் ஹாண்ட்லூம்ஸ்கிளாத் மான்யு பாக்சரிங் எக்ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனுக்கு விசைத்தறிக்கு