44
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
சொல்வதிலிருந்து, நியாயமாக வெளியிலே கடைப்பிடிக்கப்பட வேண்டிய P.C.R. சட்டம்கூட வலிமையிழந்து விடுமோ என்கிற பயமும் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. இப்போது பலர் இந்த P.C.R. சட்டமே கூடாது என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கருத்து இந்த அரசுக்கு உடன்பாடான கருத்து அல்ல என்பதை வெளிப்படையாகப் பல முறை தெரிவித்திருக்கின்றோம். இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு சட்டமன்றத்தினுடைய மாண்புமிகு உறுப்பினரே, வேண்டுமென்றே, திட்டமிட்டு ஓர் அமைச்சர் மீது அவதூறு கூறுவது மாத்திரமல்ல, ஜாதிப் பிரச்சினையைக் கிளப்பிவிடக் கூடிய ஒரு நிலையை ஏற்படுத்துவது நிச்சயமாக உரிமைப் பிரச்சினைக்கு உட்பட்ட ஒன்றேயாகும். இந்த நிகழ்வுகள் - தாமரைக்கனியினுடைய நிகழ்வுகள் சட்டப் பேரவையில் நடைபெற்ற பிறகு, தொடர்ந்து பல்வேறான அவதூறு செய்திகள், உண்மைக்கு மாறான செய்திகள் இந்த அவையைப் பற்றியும், மாண்புமிகு பேரவைத் தலைவராகிய தங்களைப் பற்றியும், அமைச்சர்களைப் பற்றியும், இங்கேயிருக்கின்ற அவை உறுப்பினர்களைப் பற்றியும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பத்திரிகைகளும் சற்றும் யோசிக்காமல், சாதியின் பெயரைச் சொல்லி அமைச்சர் திட்டினார் என்று சொன்ன ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு, ஒரு பரபரப்பை உண்டாக்குவதற்கு, அவர்களும், பத்திரிகைகாரர்களும் காரணமாகிவிடுகிறார்கள் என்பதை எண்ணும்போது, பத்திரிகை தர்மத்தை எண்ணிச் சிரிப்பதா, அழுவதா என்றே எனக்குப் புரியவில்லை.
ம்
கருப்பசாமி அவர்கள் எந்த அளவுக்கு உண்மைகளைத் திரித்துக் கூறுபவர் என்பதற்கு, இரண்டு பத்திரிகைகளில் வந்த செய்திகளை மாத்திரம் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். என் கையிலே இருப்பது மாலை முரசு பத்திரிகை. 23-3-1999 செவ்வாய்க்கிழமை சென்னையிலே வெளிவந்த பத்திரிகை. வெளியூர்களிலே 24ஆம் தேதி வெளியிடப்பட்ட பத்திரிகை. அந்தப் பத்திரிகையிலே, முதல் பக்கத்திலே Indian Express ஸிலும், தினமணியிலும் வந்த படத்தை reproduce செய்து - மறுபிரசுரம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதிலே, மாண்புமிகு உறுப்பினர் கருப்பசாமி அவர்கள் கை முழுவதும்,
—