கலைஞரின் சட்டமன்ற உரைகள்
459
க்
விதத்தில் ஜனநாயக முறைக்கு மாறானது என்பதை என்னாலே புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தத் தீர்மானங்களைக் கொண்டுவந்த கட்சித் தலைவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. பாராளுமன்றத்திலே பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற முன்னவர் அவர்களாலும் புரிந்து கொள்ள முடியாது என்றே நான் நம்புகிறேன். ஒரு மணிக்கு 4 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாமா என்று கேட்கிறார். ஆனால் பல விஷயங்களைப் பற்றிப் பிரச்சினைகள் எழுப்பப்பட்டபோது எல்லாம் நம்முடைய முதலமைச்சர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருகிற நேரத்திலே அவைகளைப்பற்றியெல்லாம் விளக்குகிறேன் என்று குறிப் பிட்டுப் பல விஷயங்களை இந்த மன்றத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்க இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, கண்டனத் தீர்மானங்களைப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். எனவே நாலாயிரம் வீண் செலவு அல்ல, நல்ல செலவுதான் நல்ல விவாதங்களை மேற்கொள்வதற்காக அமைகின்ற செலவுதான் என்பதை முதலிலே நான் கூறிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
ஒரு
தீர்மானம் அவையிலே விவாதிக்கப்படுகின்ற நேரத்தில் அது பணத்தைப் பாழாக்குகின்ற விஷயம். ஜன நாயகத்திற்கு முரணானது என்று ஒரு அமைச்சர் வெளியிலே பேசுவது அவையின் உரிமையைக்கூட பாதிக்கக்கூடிய ஒன்றாகும். நான் அதற்காக உரிமைப்பிரச்சினை எதையும் இங்கே எழுப்பப் போவதில்லை. இருந்தாலும் அவையிலே உள்ள உறுப்பினர்களுடைய கவனத்திற்கு அதைக் கொண்டுவர வேண்டுமென்றுதான் எடுத்துச் சொன்னேன்.
1இந்த அரசின் மீது ஏற்கனவே ஒருமுறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அளிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்பொழுது நான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டேன், உங்கள் மீது நம்பிக்கையில்லை. உடனடியாக ராஜினாமா செய்து விடுங்கள் என்று உங்களை அச்சுறுத்துவதற்காகவோ, உங்களுக்கு அறிவுரை கூறுவதற் காகவோ இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரவில்லை என்றும், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இருக்கின்ற பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அரசு தான் செல்லுகின்ற போக்கிலேயிருந்து தன்னை மாற்றிக் கொள்ளவும்,