கலைஞரின் சட்டமன்ற உரைகள்
461
அ அனைத்தும் மில்தொழிலாளருக்குத் தரப்படுவதுபோல கொடுக்கப்பட வேண்டும். இன்று தினப்பத்திரிகையில் தமிழக அரசு ஒரு குழுவை நியமித்திருப்பதாகப் படித்தேன்." இன்று என்றால் அன்று கழக ஆட்சியின்போது விவசாயிகளுக்கு அன்றாட கூலியை எந்த அளவிற்கு உயர்த்தலாம் என்பது பற்றி ஆராய்ந்து கருத்துக் கூறவே அந்தக் குழு நியமிக்கப் பட்டிருப்பதாக அதில் விளக்கப்பட்டிருந்தது. தினக்கூலி
என்பதை அறவே அகற்றியே ஆக வேண்டும். மாதச் சம்பளம், கொடுக்கப்பட வேண்டும். அதுவும்போக லாபத்தில் பங்கும் தரப்பட்டுத் தீரவேண்டும். வாயில்லாப் பூச்சியான விவசாயிகளை அவ்வப்போது ஒருசில ரூபாய்களை அதிகப் படுத்துவதன் மூலம் பாவனை காட்டி, அவர்களைப் புகழ்ந்து பாராட்டிப் பேசியே நெடுங்காலத்திற்கு ஊமைகளாக அழுத்தி விடலாம் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம். விவசாய சமுதாயம் இனிமேலும் பொறுத்திருக்கும் என்று வீண் கற்பனையில் யாரும் மூழ்கி இருக்க வேண்டாம்.” என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் விகடன் பத்திரிகையிலே ஒரு கட்டுரை எழுதி, அதைத் தென்னகம் ஏடு அன்றைக்கு எடுத்து வெளியிட்டிருந்தது. இப்போது விவசாய சமுதாயம் பொங்கி எழுந்து, பொறுமை இழந்துப் போர்க்கொடி உயர்த்தி இருக்கிற காட்சியினைக் காணுகிறோம்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு விவசாயிக்கான கூலியை உயர்த்த வேண்டும் என்பதற்காக ஒருகுழு அமைத்த போது, அது இன்றைய முதல் அமைச்சர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல், விவசாயிகள் போர்க்கோலம் பூணுவதற்கு முன் அவர்களுக்கு வாழ்க்கை உத்திரவாதம் அளிக்க வேண்டும், மாத வருமான உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இன்றைக்குப் பத்திரிகையிலே பார்த்தால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே எப்படிக் கூலி உயர்வு அதிகப்படுத்தப்பட்டதோ அதுபோன்ற செய்தியைத்தான் கீழ்த் தஞ்சையிலே உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு அதிகப்படுத்தப்பட்டது என்ற செய்தியைத் தான் நாம் காண்கிறோம். எனவே தேர்தலுக்கு முன்பு செய்யப் மக்களிடத்திலே, நாங்கள் வந்தால் அதைச் போகிறோம். இதைச் செய்யப் போகிறோம் என்றெல்லாம்