பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

வாக்குகளைப் பெறுகின்ற வேலை மிக எளிதாக நடைபெற்று முடிந்தது. at பாக 000 31

அது மாத்திரமா, இராமநாதபுரம் மாவட்டத்திலே, நம் முடைய முதலமைச்சர், அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் பிரச்சாரம் நடத்தியபொழுது சொன்னார். இந்தப் பகுதியிலே உள்ள முக்குலத்து மக்களுக்கு நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன் என்று சொன்னார். அந்த வாக்குறுதி 10-6-1977 ஆம் நாளன்று தென்னகம் பத்திரிகை யில் மிகப்பெரிய எழுத்தில், இரண்டாவது பேனர் என்று சொல்வார்களே, அந்த இரண்டாவது பேனராகக் கொட்டை எழுத்துச் செய்தியாக வெளியிடப்பட்டு உள்ளது. என்ன சொன்னார் இன்றைய முதலமைச்சர் அன்றைக்கு? 'குற்றப் பரம்பரைச் சட்டம் இன்னமும் அமுலில் இருக்கும்போது, நாட்டில் நடைபெறுவது மக்கள் ஆட்சியா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழத்தான் செய்யும். நான் இந்தப் பகுதி மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், அரசு அந்தக் குற்றப் பரம்பரைச் சட்டத்தை அகற்றும்'- எம்.ஜி.ஆர். 10-6-1977 அருப்புக்கோட்டை கூட்டத்தில் என்று செய்தி வந்தது. அங்கேயிருந்த மக்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அற்றிருந்த காரணத்தாலோ அல்லது இவர் சொல்கிறாரே, நம்பத்தான் வேண்டுமென்ற காரணத்தாலோ வாக்குகளை வாரி வாரி வழங்கினார்கள். ஆனால், குற்றப் பரம்பரைச் சட்டம் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் காலத்திலேயே அகற்றப்பட்டு விட்டது என்பதை அந்தப் பகுதி மக்களுக்கு யாரும் எடுத்துச் சொல்லவும் இல்லை. அல்லது அவர்கள் அறிந்திருந்தாலும் இவர் சொல்லியிருக்கிறாரே என்ற காரணத்தினால் மீண்டும் இந்தக் குற்றப் பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்யப் போகிறார்கள் போலும் என்று எண்ணிக்கொண்டு வாக்களித் தார்கள்.

இவைகளெல்லாம் தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்; தேர்தல் முடிந்த பிறகுகூட ஆளுநர் அவர்களது உரையில் 17,000 நியாய விலைக்கடைகள்-16,000 நியாய விலைக் கடைகள் என்று சொல்லி, ஆயிரம் கிராமங்களை விட்டு விட்டார்களே என்று நான் எடுத்துக்காட்டி, அதற்கென்ன அதையும் சேர்த்துக் கொண்டால் போகிறது என்று 17,000