பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

465

முதலில் 'அ' என்ற எழுத்தைப் போட்டு, அ.தி.மு.க. என்று ஆக்கியது போல, நியாய விலைக் கடைகளுக்கு முன்னால் 'அ' என்ற எழுத்தைப் போட்டு, அநியாய விலைக் கடைகள் என்று மாற்றுவார்களேயானால் பொருத்தமாக இருக்கும் என்று நான் இந்த அரசுக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன்.

இன்னொரு பெரிய திட்டத்தை வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப 14-1-1978 பொங்கல் திருநாள் அன்று நமது முதலமைச் சர் அவர்கள் தொடங்கினார். பத்திரிகைகளிலே எல்லாம் பெரும் விளம்பரம் வந்தது.

“பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு, வீடு தேடி வரும் மலிவு விலை காய்கறித் திட்டம்; முதல்வர் புரட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்" என்று அப்போது நமது முதல்வர் அவர்கள் பேசிய பேச்சு, அவர்களுடைய பத்திரிகை யிலேயே வந்திருக்கிறது. குறிப்பாக அண்ணா பத்திரிகையி லேயே வந்திருக்கிறது. மூன்று சக்கர வண்டிகளில் காய்கறிகளை வைத்து விற்பனை செய்யப்படும். வீட்டுக்குத் தேவையான எல்லா காய்கறிகளும் வீடுதேடி வரும். அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்புவார்கள் கையில் பை தூக்கிக்கொண்டு காய் கறிவாங்கச், செல்ல, அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் சகோதரிக்கும் கடைகளுக்குச் சென்று காய்கறிகளைப் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டியதில்லை. வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும் இது பயன்படுகிறது. இந்தத் திட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விஸ்தரிக்கும்போது ஆயிரக்கணக்கான மூன்று சக்கர வண்டிகள் தேவைப்படும். இப்படிப்பட்ட வண்டிகள் உற்பத்தி செய்ய ஒரு தொழிற் சாலையைத் துவக்கலாம். அதனால் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு வேலை வாய்ப்புக்கு இடமிருக்கிறது; எப்படி இருக்கிறது? காய்கறிகளில் தொடங்கி, மூன்று சக்கர வண்டிகள் செய்ய தொழிற்சாலைகள் கட்டுவது, பல்லாயிரக்கணக்கான பேர்களுக்கு வேலை வாய்ப்பு இப்படி அந்தத் திட்டம் அதிகமான அளவில் பொதுமக்களுக்குப் பயன்படும் என்று சொன்னார்கள்.

16-க.ச.உ.(அ.தீ.) பா-2