466
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அந்தப் பேச்சு எல்லாப் பத்திரிகைகளிலும், ஆளும்கட்சி பத்திரிகைகளிலும் மிக விரிவாக வெளியிடப்பட்டது. ஒரு கண்ணாடி வியாபாரியின் கதையைச் சொல்வார்கள். ஒரு கண்ணாடிக் கடைக்காரன் தன்னிடத்திலே இருக்கும் கண்ணாடி களை விற்று, அதிலே வரும் பணத்தைக் கொண்டு, வேறு சில பொருள்களை வாங்கி, வியாபாரம் செய்து, அதிலே வருகிற பணத்தைக் கொண்டு பெரிய பங்களா கட்டி, அந்தப் பங்களா வில் வசிக்கும் நேரத்தில் சீமான் வீட்டுப் பெண்கள் வந்து என்னைத் திருமணம் செய்துகொள் என்று கேட்கிற நேரத்தில், இந்தக் காலால் உதைப்பேன் என்று சொல்லி, உதைத்துக் கால்பட, அதனால் அந்தக் கண்ணாடிக் கூடையையே உடைத்துவிட்டார் என்று அல்லார் (பழங்கால மக்கள்) கதை யைச் சொல்வார்கள். அதேபோலதான் இவர்கள் அறிவித்துள்ள காய்கறி வியாபாரம். 3 சக்கரவண்டிகள், 3 சக்கரவண்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை, அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்ய ஆயிரக்கணக்கான பேர், அந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய மூலப் பொருள்களைத் தயாரிக்க கிராமங்கள்தோறும் தொழிற்சாலை என்று அந்த அளவிற்குப் பரவலாகத் திட்டத்தை அறிவித்தார்கள். மிளகாய்ப் பொடி, மசாலா பொடி வீட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று சொல்லப்பட்டது. அந்தத் திட்டத்திற்கு மிளகாய்ப்பொடி தூள் பட்டதா, அல்லது சென்னை நகர மக்களின் கண்களில் மிளகாய் பொடி தூவப் பட்டதா, அந்தத் திட்டம் என்ன ஆயிற்று. விரிவாக்கப்படும், விஸ்தரிக்கப் படும் என்று ஆரம்பிக்கப்பட்ட திட்டம், அதுவும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்ன ஆயிற்று என்பதை இந்த அவையே அறிந்து கொள்ள விரும்புகிறது.
வேலை வாய்ப்புத் திட்டத்தைப்பற்றிச் சொல்கிறபோது ஏறத்தாழ 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்கள் கிராமங்களில் அவர் அவர்கள் செய்துகொண்டு இருக்கும் வேலைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மேலவையில் முதலமைச்சர் பேசியதாக எனக்கு நினைவு. பத்திரிகைகளிலும் பார்த்தேன். வெள்ளம், புயல் இப்படிப்பட்ட சேதங்கள் நிகழ்ந்த காலத்தில்