பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

புளுகை,

அவதூறை, அண்டப் ஆகாசப் புளுகைச் சொல்கிறவர்கள், அவர்கள் அ.தி.மு.க. காரர்களாகத்தான் இருக்க முடியும்; வேறு யாராகவும் இருக்க முடியாது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

இன்னொன்று

காலையில்கூட, தங்களுடைய அறையிலே இரண்டு, நண்பர்களிடத்திலே - தாங்கள் ங்கு வந்த பிறகு, அங்கே பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்களிடத்திலே குறிப்பிட்டேன்.

மார்க்கபந்து என்கிற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அவர் ஓர் அறிக்கை விட்டிருக்கிறார். அதுவும் கதிரவன் பத்திரிகையிலே வந்திருக்கிறது. தாமரைக்கனி எப்படி வீரபாண்டி ஆறுமுகத்தை அடித்திருக்க முடியும் என்று. அவர் - மார்க்கபந்து - நல்ல வக்கீல், Bar Council தலைவர்கூட, எப்படி அடிக்க முடியும் என்று கேள்வி கேட்டு, அமைச்சர்கள் அமர்ந்திருக்கின்ற வரிசைக்கு முன் வரிசையிலே தாமரைக்கனிக்கு இடமில்லை, தாமரைக்கனி பின்வரிசையிலே தான் அமர்ந்திருக்கிறார், அவர் எப்படி வீரபாண்டி ஆறுமுகத்தைப் போய் தாக்கி இருக்க முடியும் என்று ஓர் கேள்வியை மார்க்கபந்து அவர்கள் அருமையான கேட்டிருக்கிறார்கள். அவர் இந்தச் சட்டசபைக்கே வந்து பார்த்ததில்லை போலும். அல்லது, ஒருவேளை அவர் பார்க்கவந்தபோது, தாமரைக்கனி வழக்கம் போல் தன்னுடைய முன்வரிசை இடத்தைவிட்டு, தன் நண்பர்களுடைய இடத்திற்குப்போய் உட்கார்ந்திருக்கக்கூடும். அதை வைத்துக் கொண்டு, அவருக்கு முன் வரிசையிலே இடம் இல்லை என்று அவர் சொல்கிறார். இப்படிப் போட்டிப் போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் பொய்ச் செய்திகளை வெளியிட்டு, அவை பத்திரிகைகளிலும் வெளிவருவதைக் காணும்போது நான் உள்ளபடியே மிகுந்த வேதனைப்படுகிறேன்.

ஆலடி அருணா அவர்களானாலும் அல்லது வீரபாண்டி ஆறுமுகம் அவர்களானாலும், ஏன் இந்த அவையிலே இருக்கிற