பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

47

யாரானாலும், யாருமே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைப் பார்த்து, அந்தச் சமுதாயத்திலே பிறந்தவர்களைப் பார்த்து, அவர்களுடைய ஜாதியின் பெயரைக் குறிப்பிட்டுத் திட்டுகின்ற அளவிற்கு நாகரிகம் அற்றவர்கள் அல்லர். (மேசையைத் தட்டும் ஒலி). அத்தகைய நாத்தழும்பு ஏறியவர்களும் அல்லர். இன்னும் சொல்லப்போனால், எங்களைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்களுடைய குருகுலத்திலே பயின்று, அறிஞர் அண்ணா அவர்களிடத்திலே பழகி, அவர்களுடைய இனிய இலட்சியங்களையெல்லாம் இதயத்திலே ஏந்திக் கொண்டிருக்கிற நாங்கள், எங்களைப் போன்ற ஒரு சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து ஜாதியின் பெயரால் வசைமாரி பொழிந்தோம் என்று கூறுவது, இட்டுக்கட்டிய, அவதூறான திட்டமிட்ட பொய் என்பதை நிரூபிக்கின்ற வகையில், அவரை அழைத்து, அவருக்கு வாய்ப்பளித்து விசாரிக்கின்ற வகையில் - இந்தப் பிரச்சினையை மாண்புமிகு அமைச்சர் ஆலடி அருணா அவர்கள் எழுப்பியிருக்கின்ற இந்த உரிமைப் பிரச்சினையை - உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கவேண்டுமென்று இந்த அவையின் சார்பாகத் தங்களை நான் மெத்த பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

-