பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

489

சட்டமன்ற உறுப்பினர்கள் படிப்பதற்காகப் படிப்பகத் திலே வாங்கிப் போடப்படும் பத்திரிகை. இதைப்பற்றி முன்பே பலமுறை தங்களிடத்தில் சொல்லியிருக்கிறேன் அலுவல் அறையில் முன்னவரிடத்திலும் சொல்லியிருக்கிறேன். இந்த அளவிற்கு உளி வீச்சு சம்பவத்தை நீங்கள் எழுதிவிட்ட காரணத்தினால் நான் ஒன்றும் புண்படப் போவதில்லை. நிலை மைகள் எப்படியிருக்கின்றன என்பதை எடுத்துரைப்பதற்காகத் தான் இதைச் சொல்கிறேனேயல்லாமல் வேறல்ல என்பதைத் தான் சுட்டிக்காட்டுகிறேன்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப் புக்கு வந்த நேரத்தில் 1977 ஆம் ஆண்டு மே திங்கள் 23 ஆம் நாளில் ஒன்றைச் சொன்னார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுப் பதவிக்குப் போகிறவர்களின் கணக்கை இப்பொழுதே சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பதவிக்குப் போனபின் தவறு செய்து சொத்துச்சேர்த்திருந்தால் நடவடிக்கை எடுத்து அவர்களுடைய கணக்கைத் தீர்த்து விடுவோம் என்று நம் முடைய முதலமைச்சர் பேசினார். அப்படி கணக்குத் தீர்க்க பல பேருடைய பட்டியல் என்னிடத்திலே இருக்கிறது

நாகர்கோயிலுக்குச் சென்று பார்த்தால் அங்கே முன்னாள் எம்.பி. கட்டியிருக்கிற மாடமாளிகை, கூடகோபுரம் நம்முடைய முதலமைச்சருடைய கண்ணுக்குத் தெரியாமல் போகாது. தில்லைநகரத்திலே ஒரு எம்.பி. கட்டியிருக்கிற மாட மாளிகை, கூடகோபுரம், உப்பரிகை, நம்முடைய முதலமைச்சரவர் களுடைய கண்ணுக்குத் தெரியாமல் போகாது. எனவே, தஞ்சைக்குச் சென்றாலும், வேறு எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் அவர் சொன்ன கணக்குத் தீர்க்கவேண்டியவர் பட்டியலில் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியும்.

ஊழல்கள்-என்னுடைய ஆட்சியில் அது நடைபெறாது. இது கொள்கை என்று இப்பொழுதுகூடச் சொன்னார். நம் முடைய நண்பர் கந்தசாமி அவர்கள் எழுப்பிய பிரச்சனைக்கு, சுப்பு அவர்கள் தொடர்ந்து எழுப்பிய பிரச்சனைக்கு