கலைஞரின் சட்டமன்ற உரைகள்
491
அதைப்போலவே ஒரு வழக்கு; அது 15 ஆம் தேதி; இது 13ஆம் தேதி. இதே அச்சுதன் நாயர் என்ற சைதை காவல் நிலைய உதவி ஆய்வாளர், இதை ஆத்து நகரில் சித்ரா என்கிற ஒரு பெண்ணைக் கைது செய்கிறார். அந்தப் பெண் நிறைவான கர்ப்பிணி. அவரை ஜாமீனிலே விட மறுக்கிறார்கள். சிறைச் சாலையிலே அடைக்கிறார்கள். சிறைச்சாலையிலேதான் பிரசவம் கூட நடைபெற்றது என்ற செய்தி வருகிறது. ஏன் இரண்டு வழக்குகளுக்கு இரண்டு விதமான டிரீட்மெண்ட் என்று கேட்கிறேன்? இதிலே இரண்டு நிலை எடுக்கவேண்டிய காரணம் என்ன? ஆளும் கட்சியினுடைய தலையீடு என்பதைத் தவிர வேறு காரணம் ஏதாவது கூற முடியுமா?
ஊழலே இல்லை, குறைபாடுகளே இல்லை, முறைகேடு களே இல்லை என்று சொல்கிறீர்களே; நான், நமது அமைச்சர் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.கிருஷ்ணாசாமி அவர்கள் இன்று அமைச்சரவையில் அமர்ந்துள்ளார்; அவர் அமைச்சராகி விட்டார்; நான் மகிழ்ச்சியடைகிறேன். வரவேற்கிறேன்; வாழ்துகிறேன். ஆனால், அவர் 1977ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க ஆட்சி அமைக்கிறபோது, பிறகு, 1978ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18 ஆம் நாளில் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திற்குக் குவாலிடி பிரிண்டர்ஸ் முழு உரிமையாளர் ஆக விளங்கும் திரு.கே. கிருஷ்ணசாமி அவர்களுக்குத் தேசிய மயமாக்கப்பட்ட முக்கிய பாட புத்தகங்களை, அச்சு வேலை களைச் செய்யக்கோரும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பல இலட்ச ரூபாய்க்கான ஒப்பந்தம் திரு.கே.ஏ. கிருஷ்ணசாமி அவர்களின் சொந்த நிர்வாகத்திற்கு, அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விட்டார்களா என்பது தெரியாது.
டெண்டர்
மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிற சம்பவம் வழக்கு மன்றத்திற்குச் சென்று முறையாக விவாதிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. தயவுசெய்து அந்தத் தீர்ப்பை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் படித்துப் பார்த்து, அதில் ஏதாவது இருந்தால் இந்த மாமன்றத்திலே வைக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.