பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

493

அவருக்குப் பதில் 1978-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12-ம் நாளன்று வருகிறது. என்ன சுறுசுறுப்பு பாருங்கள். நம் பாடநூல் நிறுவனத்திற்கு! 12-ம் தேதியே பதில் கடிதம் வருகிறது. திரு.கே.ஏ.கிருஷ்ணசாமிக்கு ஒப்பந்ததாரர் உரிமையை ரத்து செய்கிறோம். அந்த ஒப்பந்தத்தைத் திரு.குணாளனுக்கு உரிமையாக்குவது (மேகலை எண்டர்பிரைசின் உரிமையாளர்) சம்பந்தமாகத் தனியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கிறார்கள். பதில் நியாயமானதாகத்தான் தோன்றுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிற நேரத்தில் வழக் கறிஞர் ராகவாச்சாரி அவர்கள் பாடநூல் நிறுவனத்தின் தலைவர் மோகனரங்கம் அவர்களைப் பார்த்துக் கேட்கிறார், அவர் 55 வயதைத் தாண்டியவர், ராஜாஜி மண்டபத்தில் முதலமைச்சர் அவர்கள் பேசுகிற நேரத்தில் 55 வயதைத் தாண்டியவர்களுக்கு யாருக்கும் வேலை நீட்டிப்புக் கிடையாது என்று சொன்னார்; அடுத்த 2 நாளுக்குப் பிறகு வேலை நீட்டிப்புப் பெற்றவர் இந்த மோகனரங்கம் அந்த மோகனரங்கத்தை வழக்கறிஞர் ராகவாச்சாரி கேட்கிற போது, கோர்ட்டாருக்குச் சொல்லுங்கள். ஒப்பந்தத் தேதிக்கும் ஒப்பந்தம் ஒப்பந்தம் ரத்தான தேதிக்கும் இடையில் அச்சிட குவாலிடி பிரின்டர்ஸ்ஸுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டதா? ஒப்பந்தம் ரத்தான பிறகு ஒரு வேலையும் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை என்று அவர் பதில் சொல்கிறார். வேறு யாருக்காவது புத்தகம் அச்சிடக் கொடுத் தார்களா? மேகலை ஏஜென்சியாருக்குக் கொடுத்தார்கள். மேகலை ஏஜென்சியா யார்? அவருடைய சகோதரர் மகன் குணாளன் என்று சொல்லப்படுகிறது. நான் என்ன குறிப்பிடு கிறேன் என்றால் ஒப்பந்தம் செய்து கொண்டவர்தான் அமைச்சர் ஆகின்ற தகுதியைப் பெற்றவுடன் அந்த ஒப்பந்தத்தை நான் ரத்து செய்து கொள்கிறேன் என்று சொல்வதற்குப் பதில் இவர்களை, இன்னாரை நியமித்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டு அவருக்குக் கடிதம் எழுதி, அது கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றால், அது முறைகேடு இல்லையா என்று அவையில் நான் குற்றச்சாட்டு வைக்க விரும்புகிறேன் அல்லாமல் வேறு அல்ல.