கலைஞரின் சட்டமன்ற உரைகள்
495
டெல்லிக்கு, அவர் நம்முடைய முதலமைச்சருக்கு ஒரு சவால் விட்டார். எப்போது தெரியுமா? சேலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிற்கிறபோது ஒரு தேர்தல் கூட்டத்தில் அ.தி.மு.க மேடையில் நம்முடைய முதலமைச்சர் அவர் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில், அவரது மேடையில் பேசிய ஒருவர் சொன்னார். 1972-ல் ஒரு கைதியை விடுவிக்க ராஜாராம் ஒரு லட்சம் ரூபாய் பெற்றார் என்று புகார் கூறப்படுகிறது. இதுபற்றிச் சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். அந்தக் கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் அந்தப் புகார் மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறினார். அதைப்பற்றி ராஜாராம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அது எல்லாப் பத்திரிகையிலும் வந்தது. என்ன அறிக்கை தெரியுமா? என்னைப் பற்றி இதுவரையில் சொல்லப்படாத புகார் எம்.ஜி.ஆர். கூட்டத்தில் சொல்லப்பட்டது என்று பத்திரிகை வாயிலாகச் செய்தி அறிந்தேன். யாரோ ஒரு கைதியை விடுதலை செய்ய ஒரு லட்சம் ரூபாய் நான் 1972-ல் பெற்றதாக ஜேப்பியார் புகார் கூறி இருக்கிறார். 1972 முதல் 1976 சனவரி வரையில் நான் அமைச்சராக இருந்து இருக்கிறேன். அதுவரையில் எம்.ஜி.ஆரோ அல்லது எம்.ஜி.ஆர் கட்சியைச் சேர்ந்தவர்களோ எப்படி எந்தப் புகாரும் கூறவில்லை. தேர்தலில் அவர் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகின்ற ஒரே காரணத்தால் அவர்கள் அந்தப் புகாரைச் சொல்லியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். அந்தப் புகார் உடனடியாக நிரூபிக்கப்பட்டால்தான் இத்தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் அல்லது அப்படி நிரூபிக்கப்படாவிட்டால் குறைந்தபட்சம் எம்.ஜி.ஆர் கட்சி வேட்பாளர் வாபஸ் வாங்கக்கூட வேண்டாம் என்றால், அதற்குப் பதிலாக எம்.ஜி.ஆர் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா? இப்படி ராஜாராம் கேட்டார்.
மன்னிப்பு கேட்பாரா என்று கேட்டார் அப்படியா கேட்பாய்? டெல்லிக்குப் போ தூதராக என்று நம்முடைய முதலமைச்சர் இன்று அவரை அனுப்பியிருக்கிறார். இது அவ ருடைய பரந்த மனப்பான்மை; இதை நான் பாராட்டுகிறேன்.