496
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
ஆனால் அந்த ஊழல் புகார் என்னுடைய சந்தேகம்.
எ என்னவாயிற்று
என்பதே
இன்னொன்று, திண்டுக்கல் மருத்துவமனைப் பற்றிப் பேசினார்கள். என்னிடம் ஒரு விவரம் இருக்கிறது. திண்டுக் கல்லிலே நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சௌந்திரராஜன் அவர்களும், மாயத்தேவர், எம்.பி. அவர்களும் ஒருநாள் திடீரென்று அந்த மருத்துவமனையில் சர்பிரைஸ் விசிட் சென்றார்கள். அப்போது டாக்டர் உத்தம புத்திரன்- ஆரம்ப சுகாதார நிலையம், சின்னாளம்பட்டி, மதுரை மாவட்டம், 1978ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 14ஆம் நாளன்று காலை 11 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சௌந்திரராஜன் அவர்கள் மாயத்தேவர், எம்.பி. அவர்களோடு மருத்துவமனைக்குச் சென்றபோது சுமார் 2,000 ரூபாய் மதிப்புள்ள டபிள்யூ.எச்.ஓ அளித்த விலை உயர்ந்த மருந்துகளை டாக்டர் உத்தமபுத்திரன் கடத்திச்சென்றபோது கையும் களவுமாகப் பிடித்தார்கள். அது வரவேற்கத்தக்கது. அதற்கு ஒரு சபாஷ்.
2,000 ரூபாய் மதிப்புள்ள மருந்துத் திருட்டைக் கண்டு பிடிக்கிறார். நம்முடைய அமைச்சர். கையும் களவுமாக பக்கத்தி லேயே மாயத்தேவரை சாட்சியாக வைத்துக்கொண்டு பிடிக் கிறார். உடனடியாக சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டார். அதற்கு ஒரு சபாஷ் கூடவே தருவோம்.
அதற்குப் பிறகு சுமார் 10 நாட்களிலே மீண்டும் ஒரு அந்த மருத்துவமனையில் உத்தமபுத்திரன் வேலைக்கு அமர்த்தப்பட்டார். விசாரணை நடத்தப்படவில்லை, சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை காரணம் என்ன? இடையிலே என்ன நடந்தது? எவ்வளவு புரண்டது? இந்த உத்தமபுத்திரர்களின் ஆட்சியில் அந்த உத்தமபுத்திரன் மீண்டும் எப்படி அதே மருத்துவமனையில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்? இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திலே நான் எழுப்புகின்ற இந்த வினாவிற்குப் பதில் தேவை.
இன்னொன்று செங்கற்பட்டு மாவட்டத்திலே ஏ.பி.பி. அசிஸ்டன்ட் பப்ளிக் பிராசிகியூட்டர் கிரோடு 2 பதவி. அதைத்