பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

இருந்தது. அதன் பிறகு இந்திரா காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இந்த ஆட்சி கலைக்கப்பட்டு, இங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி, கவர்னர் ஆட்சி நடைபெற்றது. அப்போதும் 1:1 தான் இருந்தது. ஆனால் ஊழல் எல்லாம் ஒழிக்கப்போகிறோம் என்று சொன்ன இந்த ஆட்சியில் என்ன நடந்தது? அந்த 1:1 என்ற உத்தரவு மாற்றப்பட்டது. ஒரு சூப்பிரண்டுக்குப் பதவி உயர்வு கொடுத்தால் 1 ப்ரேக் இன்ஸ்பெக்டர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்று 1:4 என்கிற வகையில் என்ற உத்தரவு வந்தது. 1:1 என்ற உத்தரவு மாற்றப்பட்டுப் பிரேக் இன்ஸ்பெக்டர்ஸ்; மோட்டார் வேய்கிள்ஸ் இன்ஸ்பெக்டர் களுக்குச் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 150-க்கு மேற்பட்டவர்கள் பெரும்பணம் வசூல் செய்தார்கள் என்றும் அதன் காரணமாக வசூலிக்கப்பட்ட தொகை கொடுக்கப்பட்டதன் காரணமாக அதற்குப் பரிசாக இந்த சூப்பிரண்டு மோட்டார் வேய்கிள்ஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அளிக்கப்படுகின்ற பதவி உயர்வு 1:1 என்று இருந்ததற்குப் பதிலாக 1:4 என்ற- அதாவது ஒரு சூப்பிரண்டு பதவி உயர்வு பெற்றால், அதற்குப் பிறகு 4 4 ப்ரேக் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்ற பிறகுதான் அடுத்த ப்ரமோஷன் சூப்பிரண்டுக்கு என்று மாற்றியிருக் கிறார்கள் என்பது என்னுடைய குற்றச்சாட்டு. அதை இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் இந்த அமைச்சரவைக்கு எடுத்துக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்

அடுத்து இன்னொன்று பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் என்று ஒன்றிருக்கிறது. அதிலே இரண்டு கப்பல்கள் ஏற்கெனவே ஓடிக்கொண்டிருந்தன. அதிலே பழுது ஏற்பட்டதாகவும் அது பழுது பார்க்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்குச் சாமான்களை ஏற்றுகின்ற கப்பல்கள் இரண்டு வாங்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது.

1978ஆம் ஆண்டு ஜுன் திங்கள் பால்டிகா டைப் என்கிற லெனின்கிராட் கப்பல்களை வாங்கித்தர ஒரு கம்பெனி முன்வந்தது. அந்தக் கப்பல்களின் நம்பர்கள் என்னவென்றால் ஒன்று 642; இன்னொன்று 643. அந்தக் கப்பலினுடைய தாங்கும் சக்தி 38,250 மெட்ரிக் டன்ஸ். அந்தக் கப்பல் கடலுக்குள்ளே