500
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இருந்து ஒப்புதல் 1978ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11ஆம் நாளுக்குள் வராத காரணத்தால் இவர்களோடு பேரம் பேசிய அதே கம்பெனியார் 17 மில்லியன் டாலருக்குத் தருவதாக அறிவித்து விட்டார்கள். ஆனால் மறுபடியும் ஆக்போல்டன் கம்பெனியுடன் அதே கப்பல்களை முன்பு சொன்ன 22.5 மில்லியன் டாலருக்கு வாங்கித் தரும்படி கேட்டார்கள். இந்த விலையைப் பார்க்கும்போது முதலில் அந்தக் கப்பல்களின் விலை நம்முடைய கணக்குப்படி, தமிழ்நாடு சர்க்கார் முதலில் அக்கறை காட்டாமல் இருந்துவிட்டுப் பிறகு அதை 18 கோடிக்கு வாங்க முன்வந்தது. அப்போது மத்திய சர்க்காருடைய ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைக்காததற்குக் காரணம் இரண்டு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள். அதாவது பல்வேறு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தபால் மூலமாகவும் தந்தி மூலமாகவும் நேரடியாகவும் மத்திய சர்க்காரிடத்திலே இந்த விவரங்களைக் கூறிய காரணத்தால் மத்திய சர்க்கார் அதற்கான ஒப்புதலை அளிக்கத் தயங்கியது.
அது நடைபெறாமல் பிறகு 13.6 கோடி ரூபாய் அள விலே ஓப்பன் மார்க்கெட்டிலே அதன் விலையை அறிவித்து விட்டார்கள். அந்தக் கப்பல்களை மாநில சர்க்கார் வாங்க மத்திய 5 சர்க்கார் ஓப்புதல் அளித்திருந்தால் அதனுடைய விலையை விட கோடி ரூபாய் அதிகமாக விலை கொடுத்து தமிழக அரசு வாங்கவேண்டி இருந்திருக்கும். நான் இன்னொன்றும் சொல்கிறேன். ஸ்பேர் பார்ட்ஸ் போன்ற சில சாமான்கள் பார்த்து வாங்கினால் கூட, அதிலேயும் ரூபாய் 21/2 கோடி, ரூபாய் 3 கோடி இடையிலே செல்கிறது.
யாருக்குச் செல்கிறது, எங்கே செல்கிறது. லண்டனுக்கா? சுவிட்சர்லாந்துக்கா? அரேபியா நாட்டுக்கா? எந்த வழியாக மீண்டும் இந்தியாவிற்கு வரப்போகிறது? நல்லகாலம். அது இடையில் தடைப்படுத்தப்பட்டிருக்கிறது மத்திய அரசால். அது தொடருமானால் மாநில அரசு அதை வாங்குமானால் பெரும் ஊழலுக்கு அது ஆளாக வேண்டியிருக்கும் என்பதை எடுத்துக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஊழல் இல்லாத அரசாங்கமா இந்த அரசாங்கம்?
ல