இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
506
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இப்படி அதிகாரிகளைத் தங்கள் இஷ்டம்போல் ஆட்டிப் படைக்கும் தன்மையும் இன்றைக்குத் தொடர்ந்து கொண்டிருக் கிறது. எனவேதான் அதிகாரிகளுக்குச் சொல்கிறேன். எந்த அரசும் நிலையானது அல்ல. அதிகாரிகள் நிலையானவர்கள். அதே போல் விசாரணைக் கமிஷன்களும் தொடர்கதையாக ஆகிக்கொண்டிருக்கின்றன.
ய
ஆக, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலே என்னுடைய கருத்துக்கள் பலவற்றை எடுத்துக்கூறியிருக்கின்றேன் இவைகளுக் கெல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பதில் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த அமைச்சரவையில் எங்களுக்கு நம்பிக்கையில்லையென்றாலும், கூறியவற்றிற்கெல்லாம் முதலமைச்சர்
நான் அவர்கள் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை ஆதரித்து அமைகின்றேன்.