பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

509

பட்டிருக்கிறது. இதை முதல் அமைச்சரே அவர்கள் நேரிலே ஆய்வுக் குழுக் கூட்டத்திற்கு வந்து அன்றே தெரிவித்திருப் பார்களேயானால், அல்லது தான் வரஇயலாது என்று தெரிவித் திருப்பார்களேயானால் அல்லது தாங்களோ அல்லது அவை முன்னவரோ முதல் அமைச்சருடன் தொடர்புகொண்டு 30ஆம் தேதி அன்று விவாதம் முடிவடையாது என்று தெரிவித் திருந்தால், இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்காது. எப்படியோ ஏற்பட்டு விட்டது. எனவே நடந்ததைப்பற்றி இன்று மேலும் ஆய்ந்துகொண்டு இருக்க விரும்பவில்லை. இனிமேல்

இவ்விதம் நடக்கக்கூடாது. என்பதற்காகத்தான் இதைப்பற்றி நான் தங்கள் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். 3ஆம் தேதி வரை சில முக்கியமான பிரச்சினைகள், அதற்கு இங்கே கிடைக்கவேண்டிய விளக்கங்கள், தெளிவுரைகள் கிடைக்காமல் இந்த மன்ற உறுப்பினர்கள் மிகவும் சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்

கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஆசிரியர்களுடைய போராட்டம், போலீஸ்காரர்களுடைய போராட்டம், பள்ளிப் பாளையத்தில் தொழிலாளர்களுடைய போராட்டம், இவை களைப்பற்றியெல்லாம் எந்தவிதமான தகவலும் கிடைப்ப தில்லை. தகவல் கேட்கும்போது, கண்டனத் தீர்மானத்திற்கான பதில் சொல்லும்போது பதில் தரப்படும் என்று சொல்லப் படுகிறது. 'பம்பாய் மெயில்' நாடகத்தில் கதாநாயகன் எல்லா வற்றுக்கும் காலம் வரும் பதில் சொல்லுவேன், காலம் வரும் பதில் சொல்லுவேன் என்று ஒவ்வொரு காட்சியிலும் சொல்லிக் கொண்டேயிருப்பான். அதுபோல் மூன்றாம் தேதி முதலமைச்சர் பதில் சொல்லுவார், பதில் சொல்லுவார் என்று நமது பேரவை முன்னவர் அவர்கள், புன்னகைபுரிந்தவாறு பதில்சொல்லிக் கொண்டிருக்கிறார். 3ஆம் தேதி வரை பொறுத்திருக்க முடியாத வாறு இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போலீஸ் போராட்டத்தின் காரணமாகப் பஸ்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த முறைகள் வன்முறைகள், நடைபெற்றுக்கொண்டிருந்தால் அவை எங்குக் கொண்டு போய்விடும் என்பதை நாம் ஆராய வேண்டியவர்களாக இருக்கிறோம். அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு அமைதி