கலைஞரின் சட்டமன்ற உரைகள்
513
தொகை 1 கோடியே 92 இலட்சம் ரூபாய்தான். செலவு செய்யப்படாத தொகை 10 கோடியே 42 இலட்சம். அதாவது 84 சதவீதத்தைச் செலவு செய்யவில்லை
கிராமப்புற சாலைகளும் பாலங்களும் அமைக்கப்பட்டு வருவதாக உறுப்பினர்கள் எல்லாம், ஆளும் கட்சியைச் சேர்ந்த வர்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள் எல்லாம் பெருமை யோடு சொன்னார்கள். உண்மை என்னவென்று பார்த்தால் அதற்காக என்று இந்த மாமன்றம் அங்கீகரித்த தொகை 8 கோடி ரூபாய். அதிலே இன்னும் செலவு செய்யப்படாமல் இருப்பது, சுமார் 3 கோடி ரூபாய் என்பதை வருத்தத்தோடு நான் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒவ்வொரு மாநிலமும் இந்திய அரசிடத்திலே திட்டத்திற் காக அதிகத்தொகை ஒதுக்கவேண்டுமென்று கூக்குரல் போட்டு, போராடி, பிச்சை எடுக்கின்ற நிலைமைக்குக்கூட ஆளாகி, அவைகளைத் தங்களுடைய மாநிலத் திட்டங் களுக்காகச் செலவிட்டு வருகிற இந்த நேரத்தில் இங்கே மாமன்றத் தினுடைய அனுமதி பெற்று, ஒதுக்கப்பட்ட தொகையைச் செலவழிக்கப்படாமல் வைத்திருப்பது மிக மிக வேடிக்கை யானது, வேதனை அளிக்கக்கூடியது என்பதை நான் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆனால், இப்படிப்பட்டத் திட்டங்கள் அல்லது ஏற் கெனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களுடைய பராமரிப்புகள்; இவைகள் எதுவுமே நாட்டில் நடைபெறாமல், அதே நேரத்திலே இன்றைக்குத் தமிழகத்திலே இருக்கிற ஒரே ஒரு ஜனநாயக அமைப்பு இந்தச் சட்டமன்றம்தான் என்கிற நிலை ஏற்பட்டு, மற்ற மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்ற எல்லா மன்றங்களும் நிறுவனங்களும் கலைக்கப்பட்டுவிட்ட ஒரு சூழ்நிலையை நாம் காண்கிறோம். அவைகளுக்கு எல்லாம் இப்போது அமைப்பாளர்களை நியமிப்பதைப்போல நியமனங்கள்
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஏதோ பெரிய பெரிய சட்டங்கள் எல்லாம், புரட்சிகரமான சட்டங்கள் எல்லாம் கூட்டுறவுத் துறையில் வருவதாக எடுத்துச் சொல்லப்பட்டு, ஆனால் மாமன்றம் கூடி இருக்கிற நேரத்தி லேயே பத்திரிகையிலே பார்த்து நாம் சில செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம்.