பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

515

டெவலப்மெண்ட் ஆபிசருக்குக் கீழே உள்ள ஒரு அதிகாரி. பிளாக் டெவலப்மெண்ட் ஆபீசர் கொடுத்த ஒரு காசோலையை, அதை அந்த வகைக்குச் செலவிடலாமா என்று தணிக்கை செய்பவர், அவர் கீழே உள்ள அதிகாரி ஒருவர். அந்த அளவுக்கு நிர்வாகம் சீர் குலைந்து இருக்கிறது. அதற்கு இது ஒரு சான்று ஆகும். ஜனநாயக அமைப்புகள் கலைக்கப் பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் பெரிய திட்டங்களை நிறை வேற்றாவிட்டாலும், தேர்தல் நேரத்திலே ஆங்காங்குப் புயல் வெள்ளம் துயர் துடைப்பு விழாக்களை நடத்திப் புடவை, வேட்டிகளை வழங்குகிற விழாக்களை நடத்திவிட்டால் மக்களின் மதிப்பைக் கவர்ந்து விடலாம் என்று இருக்கக்கூடிய முயற்சியில் இறங்குகிறார்களே தவிர, எதுவும் உருப்படியாக செய்வதில்லை. நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி இப்படி தேர்தல் ஸ்டண்டுகள் நடத்துகிறார். சமீபத்தில் மதுரை மாநகரில் நமது முதலமைச்சர் அவர்கள், திருப்பூர் குமரன் அவர்களுடைய துணைவியார் இராமாயி அவர்கள் அங்கே நடைபெறுகிற விழாவிற்கு வருகை தந்திருந்தபோதோ, அல்லது வரவழைக்கப்பட்டாரோ, அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர்களை மேடைக்கு அழைத்து அந்த விழாவிலேயே அவர்களுக்கு அரசின் சார்பில் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்; அது தவிர மாதந்தோறும் மானியமும் வழங்கப்படும் என்று திடீர் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துவிட்டார்.

உண்மை நிலை என்னவென்றால், திருப்பூரிலிருந்து இதே இராமாயி அவர்களின் சார்பாக திரு. பி. இராமசாமி என்பவர் 3-7-78இல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதிலே அவர் 'காமராஜ் அவர்களின் சகோதரி அவர்களுக்குப் பென்ஷன் கொடுப்பதுபோல, திருப்பூர் தியாகி கொடி காத்த குமரன் அவர்களின் துணை வியார் திருமதி கே. இராமாயி அவர்களுக்கும் மாதம் 500 ரூபாய் தந்து உதவ வேண்டும் என்று முதலமைச்சர் அவர் களைக் கேட்டுக்கொள்கிறேன். இதுபற்றித் தங்கள் அறி விப்பை எங்களுக்குத் தர வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” இப்படி 3-7-78இல் ஒரு கடிதம் முதலமைச் சருக்கு வருகிறது. முதலமைச்சரின் பார்வைக்குச் சென்றுதான்