கலைஞரின் சட்டமன்ற உரைகள்
517
Nadu Health and Family Planning, in name cover, duly sealed, the list of selected for approval of Government before publication.
வெளியிடுவதற்கு முன்பு அந்தப் பட்டியலை கவர்ன் மென்ட் அப்ரூவலுக்கு, அரசாங்கத்தினுடைய ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டுமென்று தெளிவாக அந்த ஜீ.ஓ.வின் 8ஆவது பிரிவு எடுத்துக்காட்டுகிறது. ஆனால் என்ன நடைபெற்றிருக் கிறது என்றால், இப்போது அவற்றை எந்த ஜீ.ஓ.வும் வெளி யிடப்படாமல் 'கோ ஆர்டினேஷன் கமிட்டிச்', செயலாளரே தானாகவே அந்தப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் அரசாங்கத்தின் விதிப்படி செயலாளர் அந்தப் பட்டியலைப் பெற்று, அதிலே ஒரு 'நோட்' எழுதி அனுப்புவார்கள். அதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கையெழுத்து இட்டு, முதல் அமைச்சருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அப்படி நடைபெற்றதா என்றால் நடைபெற வில்லை. செயலாளருடைய குறிப்பும் கிடையாது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெறும் கையெழுத்து மாத்திரம் அதிலே போட்டிருக்கிறார்கள். அதற்குமேல், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மார்க் வாங்கியவர்கள் பட்டியல் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில் முதல் அமைச்சர் அவர்கள் டிக் பண்ணியிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. மொத்தம் 1015 மாணவர்கள்தான் சேர்க்கப்படலாம் என்று
அரசாங்கத் தினுடைய ஜீ.ஓ. கூறுகிறது. அப்படித்தான் ப்ராஸ்பெக்டஸிலும் இருக்கிறது. 1015 மாணவர்கள்தான் சேர்க்கப்படலாம் என்று. ஆனால், திடீரென்று அந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக் கிறது. அதற்குரிய அனுமதிகளைப் பெறவேண்டிய இடங்களில் உரிய நேரத்தில் பெற்றார்களா இல்லையா என்பது வேறு விவகாரம். ஆனால் நான் இங்கே ஒரு மிக முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். பட்டியல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடத்தில் காட்டப்பட்டதாகவும், அவர் செப்டம்பர் 9ஆம் தேதி அன்று அதிலே கையெழுத்து இட்டதாகவும் அதுபற்றி ஒருபக்கம் விசாரணை நடைபெறுகிற இடத்தில் எடுத்துக்காட்டப்பட்டு விசாரித்தவர்கள் மேலும் சில விவரங்களைக் கேட்டதற்குப் பிறகு மறுநாள் அபிடவிட் தாக்கல் செய்கிற நேரத்தில் 9ஆம் தேதிக்குப் பதிலாக 8ஆம் தேதி