பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

519

கொண்டவர்களின் பிள்ளைகளுக்கு 6 இடங்கள் ஒதுக்க வேண்டும். இப்படி 15 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்கின்ற உத்தரவு அடுத்தமாதம் வெளிவருகிறது. இது சட்டத்திற்கு உட்பட்டதா, நியாயம் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த 15 பேர்களுக்கு இடம் உண்டு என்பதும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு இடம் உண்டு என்பதும், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் வீட்டுப் பிள்ளைகளுக்கு இடம்

உண்டு என்பதும், விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இடம் உண்டு என்பதும் 1015 பேர்களுக்கு இடம் என்று அப்போது அறிவிக்கப்பட்ட கால கட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்குமேயானால், விளம்பரப் படுத்தப்பட்டிருக்குமேயானால் இப்படிப்பட்டவர் எல்லாம் அதில் போட்டியிடுவதற்கு அவர்களெல்லாம் சேர்ந்திருக்கக் கூடும்.

எனவே அது தடுக்கப்பட்டு 1,015 இடங்களும் பூர்த்தி யான பிறகு முதலமைச்சர் இப்படிப்பட்ட உத்தரவை வெளியிடுகிறார். இப்படி சரித்திர பிரசித்தி வாய்ந்த மிக முக்கியமான கொள்கைக் குறிப்பு அடங்கிய இந்த பைலை ஜெயராமன் என்கின்ற பிரிவு அலுவலர்; அவர்தான் இந்த பைலை அனுப்புகிறார். பிறகு சார்புச் செயலாளர் தண்டாயுத பாணி 13-9-1979இல் கையெழுத்திடுகிறார். பிறகு ராஜண்ணன், மக்கள் நல்வாழ்வு குடும்பத்துறை துணைச் செயலாளர் கையெழுத்திடுகிறார். பிறகு முராரி செயலாளர் அவர் கையெழுத்திடுகிறார். 13-9-79இல் கையெழுத்திடுகிறார். பிறகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் 27-9-79இல் கையெழுத்திடுகிறார். பிறகு எம்.ஜி.ஆர். 3-10-79 இல் கையெழுத்திடுகிறார். இப்படி பைலைப் பார்த்தால், 13-9-79இல் இது ஆரம்பித்ததாகத் தெரிகிறது. என்னிடத்தில் இருப்பது இந்தப் பைலுடைய 'போட்டோ ஸ்டட்' காப்பி, முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், மற்ற இலாகாவில் உள்ளவர்களும் கையெழுத்திட்டுள்ள பைலின் போட்டோ ஸ்டட் காப்பி என்னிடத்தில் இருக்கிறது. ஜெயராமன் என்பவர்