538
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அல்ல. சென்னை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் உள்ள சௌத் இந்தியா எக்ஸ்போர்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட்டுடன் தொடர்பு கொண்டவர்; எல்லாவற்றையும் விட, சித்ரா கிருஷ்ணசாமிக்கு அருமை நண்பர். இதிலிருந்து எல்லாம் புரிந்து கொள்ளலாம். இந்த சுப்பி என்கிற சுப்பிரமணியம்தான் பல்கேரியா கப்பல் தளத்தின் பிரதிநிதியாக இந்தப் பேச்சு வார்த்தைகளிலே உள்ளே நுழைகிறார் 5-2-79இல் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் சென்னையில் இருந்து சி.வி.சுப்பிரமணியம் என்கிற சுப்பிக்கு ஒரு டெலக்ஸ் அனுப்புகிறது. அந்த டெலக்சில் 10.75 மில்லியன் டாலருக்கு, அதாவது 8 கோடியே 60 லட்சம் ரூபாய்க்குக் கப்பல் ஒன்று வாங்கலாம் என்ற உறுதியான 'ஆபர்' கொடுக்கிறது. அதற்கான ஆதாரம், இதோ இந்த டெலக்ஸ்.
PI
11
அதற்கடுத்தாற்போல், அந்தக் கப்பலின் விலை மில்லியன் டாலர் என்று அயல் நாட்டு தரகர் கம்பெனி விளம் பரப்படுத்தியது. எங்களுக்கு 10.75 மில்லியன் டாலருக்குத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, 11மில்லியன் டாலர் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறீர்களே, என்று சுப்பி என்கிற சுப்பிரமணியம் கேட்கிறார். உடனடியாக பல்கேரியாவில் இருந்து அந்தக் கம்பெனிகாரர்கள் பதில் தருகிறார்கள். நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களுக்குச் சொன்ன விலைக்குத் தருகிறோம். நாங்கள் விளம்பரம் வேறு நாட்டுக்காரர்களுக்குச் செய்தாலும் கூட உங்களுக்குக் கொடுப்பது நாங்கள் சொன்ன அதே 10.75 மில்லியன் டாலருக்குத் தருகிறோம் என்கிற எழுதுகிற கடிதம் சுப்பிரமணியம் அவர்களால். சுப்பி என்கிற சுப்பிரமணியம் அவர்களால் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு 6.2.79ல் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஆதாரம் எண்.5
பிறகு, 6-2-79 அன்று போக்குவரத்துத் துறை செயலாளர் பாங்கோ,ஐ.ஏ.எஸ். அவர்கள் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் சேர்மன் எச்.எம்.சிங் அவர்களுக்கு எழுதிய கடிதம், சுப்பி சம்பந்தப்பட்ட மெக்கானஸ் அன்ட் மெக்கனீஸ் கம்பெனி மூலம் 10.75 மில்லியன் டாலருக்கு அந்தக் கப்பலை