பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

539

வாங்கலாம் என்று அனுமதி தந்து கடிதம் எழுதுகிறார். இதோ அதற்கான ஆதாரம்.

டாலர்

அதே நாளில், சுப்பி சம்பந்தப்பட்ட அதே மெக்கானஸ் அன்ட் மெக்கனீஸ் கம்பெனி 10.75 மில்லியன் விலையைத் திடீரென்று 11.75 மில்லியன் டாலர் என்று அதாவது 9 கோடியே 40 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுப் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு அறிவிக்கிறது ஏன்? 10.75 மில்லியன் டாலருக்கு மேல் நீங்கள் வாங்கத் தேவை இல்லை, நாங்கள் 11 மில்லியன் டாலர் என்று அறிவித்து இருந்தாலும் 10.75 மில்லியன் டாலருக்குத் தருகிறோம் என்று அறுதியிட்டு, உறுதியிட்டு கூறிய அந்தக் கம்பெனி, திடீரென்று 11.75 மில்லியன் டாலர் என்று ஒரு கப்பலுக்கு விலை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் என்ன? இங்கேதான் சுப்பி, சித்ரா கிருஷ்ணசாமி அவர்களுடைய தந்திரங்கள். அவர்களுடைய மாய வலைகள் பின்னப்படுகின்றன. இந்த விலை உயர்வைப் பார்த்து வியப்படைந்த பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் சேர்மன் எச்.எம்.சிங், ஐ.ஏ.எஸ். 7ஆம்தேதி பாங்கோவிற்கு எழுதியுள்ள கடிதத்தில்...

In view of this, it is not clear why messrs, Mckhinanz had quoted 11.75 millon dollars for a gearless vessel..

ஒரு கியர்லெஸ் வெஸ்ஸல்லுக்கு 11.75 மில்லியன் டாலர் என்று ஏன் அந்தக் கம்பெனிக்காரர்கள் விலையை உயர்த்தி யிருக்கிறார்கள் என்று ஆச்சர்யப்படுகிறார்; அதே கம்பெனிக் காரர்கள் ஏன் விலையை உயர்த்தினார்கள் என்று நானும் ஆச்சர்யப்படுகிறேன். நீங்களும் ஆச்சர்யப்படுகிறீர்கள். நம்மைவிட திரு.எச்.எம்.சிங் ஆச்சரியப்படுகிறாரா இல்லையா என்பதற்கு இந்தக் கடிதத்தை நான் சான்றாக வைக்கிறேன். இவர் இதில் தன் ஆச்சரியத்தைத் தெரிவிக்கிறார். ஏன் அந்த விலைக்கு உயர்த்தினார்கள்?

7-2-79க்கு அடுத்த நாள் 11.75 மில்லியன் டாலர் அதாவது 9 கோடியே 40 லட்சம் ரூபாய் என்பதை 13.5 மில்லியன் டாலர் அதாவது 10 கோடியே 80 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்த்தி, அந்தத் தகவலை அதே மெக்கானாஸ்