பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

541

படுத்திக் காட்டி இருக்கின்றார். அதற்கான ஆதாரம், அவர் எழுதிக் கொடுத்ததற்கான ஆதாரமாக இந்த 8-வது ஆதாரத்தை உங்கள் முன்னால் நான் வைக்கிறேன்.

இதற்குப் பின்னால் மார்ச் மாதம் கூடிய அமைச்சரவைக் கூட்டம், மார்ச் மாதத்திலே நம்முடைய காபினட் கூடுகிறது. அதிலே 13 மில்லியன் டாலருக்கு, 10 கோடியே 40 இலட்சம் ரூபாய்க்குக் கப்பலை வாங்கலாம் என்று இந்த அரசு முடிவு செய்கிறது. இப்படிக் காபினட் எடுத்த முடிவு உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டால், பழைய சுப்பி வருகிறார். சுப்பி என் கிற சுப்பிரமணியம், ஐரோப்பாவுக்கு டெலக்ஸ் கொடுக்கிறார். அதிலே சொல்கிறார். 'பல்கேரியா பேரத்தைத் தமிழ்நாடு அரசு அப்ரூவ் செய்து விட்டதை அறிவிக்க மகிழ்கிறேன். ஆக, தமிழ்நாடு அரசு அப்ரூவ் செய்து விட்டது சுப்பி என்கிற சுப்பிர மணியத்தால் பல்கேரியாவுக்கு உடனடியாகத் தெரிவிக்கப் படுகிறது.

இது மிகவும் கஷ்டமான காரியமாக இருந்தது.' ஏன் இருக்காது? 10 மில்லியனை 13 மில்லியனாக ஆக்குவது கஷ்டமான காரியமாக இருக்காதா?

It was a difficult task

அதற்குக் கொஞ்சம் வருத்தமும்படுகிறார். பாருங்கள்

"It has been approved only at 13 million. U.S. dollars, but I have assured them that with this approval and when bango reaches Warna to sign contract Mr.P.

மிஸ்டர் பி என்பவர் அங்கே உள்ள ஒருவர்;

"Will definitely reconsider the situation and consider increase points."

என்னய்யா வேடிக்கை? பாயின்ட்களைக் குறைப்பார் என்று எண்ணுகிறேன் என்று ஒரு இடைத்தரகர் சொல்வதற்குப் பதிலாகச் சொல்கிறார்.

Mr.P.will definitely reconsider the situation and consider increase points. I am still trying to get authority for 13.1 million dollars.