பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

547

கண்டிக்கப்படுகிறார்கள். ஒரு அதிகாரி மீது பைலே தூக்கி வீசப்படுகிறது. அந்த அளவிற்கு அதிகாரிகள் கண்டிக்கப்படு கிறார்கள். ஒரு அதிகாரி இறந்துகூட போய்விடுகிறார். திரு.பாங்கோ இறந்துகூட போய் விடுகிறார். 10.75 மில்லியன் டாலரிலிருந்து, 13 மில்லியன் டாலருக்கு ஒத்துக்கொண்ட அரசு, அதைவிட அதிகாரிகள் குறைத்து முயற்சித்து ஒரு முடிவு செய்து கொண்டு வந்த பிறகு, அரசாங்கத்தினிடம் அனுமதி கேட்ட பிறகு, மத்திய அரசாங்கத்திற்கு 13 கோடி ரூபாய்க்கு அதை வாங்க வேண்டுமென்று அங்கீகாரம் கோரிக் கடிதம் எழுதப்பட்ட பிறகு 7-5-79 அன்று அமைச்சரவை மீண்டும் கூடி, ஒரு முடிவு எடுக்கிறது. கப்பல்கள் வாங்கலாம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்த பிறகு 7-5-79இல் அமைச்சரவை கூடுகிறது. அந்தக் கப்பல்களை உடனே வாங்கி விட வேண்டும் என்றா முடிவு? இல்லை, இல்லவே இல்லை. டெல்லியிலுள்ள ஷிப்பிங் டெவலப்மென்ட் பண்ட் கமிட்டி இதற்கான அங்கீகாரம் வழங்குவதை ஒத்திப்போடலாம் என்று பூம்புகார் கார்ப்பரேஷன் மூலம் தெரிவிக்க அமைச்சரவை முடிவு எடுக்கிறது. உடனடியாக அனுமதி கொடுத்து விடாதீர்கள் என்று, அனுமதி கேட்டு எழுதிய அரசு, டெல்லி ஷிப்பிங் டெவலப்மெண்ட் பண்ட் கமிட்டிக்கு நீங்கள் இந்தக் கப்பல்கள் வாங்குவதற்கு உண்டான அங்கீகாரம் வழங்குவதை ஒத்திப்போடலாம் என்று பூம்புகார் கார்ப்பரேஷன் மூலமாகத் தெரிவிக்கச் சொல்லி, அமைச்சரவை முடிவு எடுக்கிறது. வேறு ஒரு கம்பெனி இதைவிட குறைவான மனுவினைத் தந்திருப்பதாகவும் காரணம் கூறப்படுகிறது பூம்புகார் கார்ப்பரேஷன் டெல்லியில் உள்ள ஷிப்பிங் டெவலப்மெண்ட் பண்ட் கமிட்டுக்கு அனுமதி வழங்குவதை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி எழுதுகிறது உண்மையில் அமைச்சரவை எடுத்த முடிவின்படி ஒரு 'ஆபர்' வேறு கம்பெனியிடமிருந்து வந்ததா? பல்கேரியா கப்பல்களை வாங்கத் தேவை இல்லை என்று அமைச்சரவை முடிவு எடுத்து இப்போது அனுமதி வழங்க வேண்டாம் என்று டெல்லியில் உள்ள அந்தக் கமிட்டிக்குக் கடிதம் எழுதச் சொல்லிப் பூம்புகார் கார்ப்பரேஷன் மூலம் பரிந்துரை செய்தார் களா? வேறு ஒரு இனம் குறைந்த 'ஆபர்' ஒன்று வந்திருக்கிறது என்று