பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

விரும்புகிறேன். ஆகவே, இன்றைய தினம் காங்கிரஸ் கமிட்டி நாட்டை ஆளுகிறதா? காங்கிரஸ் சர்க்கார் நாட்டை ஆளுகிறதா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. தவறு செய்தவர்களும், கொள்ளை லாபம் அடிக்கிறவர்களும், கள்ளக் கணக்கு எழுது கிறவர்களும், பலர் காங்கிரஸ்காரர்கள் என்பதாலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுகிறவர்கள் என்கிற காரணத்தினாலும் சரியான நடவடிக்கை இந்த அரசாங்கத்தின் மூலம் எடுக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டை சொல்ல விரும்புகிறேன். அவர்களுடைய பாதுகாப்புக்குள்தான் இந்த அரசாங்கம் இன்றைய தினம் வாழ முடிகிறது, வாழுகிறது என்றும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அருமை நண்பர் திரு. வீரபாகு அவர்கள் கேட்டார்கள், ஊழல்களைப் பற்றி பட்டியல் தருகிறீர்களே, அவற்றிற்கு ஆதாரம் காட்டுங்கள் என்று அவருடைய பெயருக்கேற்ப வீரத்தோடு கேட்டார்கள். நான் மரியாதையோடு ஏற்றுக்கொள்கிறேன். முதல் நாள் பேசிய புலவர் கோவிந்தன் அவர்கள், வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கூட்டுறவு மத்திய பாங்கு தலைவரைப் பற்றிய குற்றங்களை குறிப்பிட்டார்கள். அந்த மாவட்டத்திலே அவர் ஒரு பெரும் காங்கிரஸ் தலைவர். இந்த சபையில் உதவி சபாநாயகராக வீற்றிருந்தவர். கூட்டுறவு மத்திய பாங்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறவர். அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு அவர் கைப்பட எழுதிய கடிதத்தோடு திரு. திரு. கோவிந்தன் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். அதன் தொடர்பாக இரண்டொரு ஆதாரத்தைச் சொல்ல விரும்புகிறேன். கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பொருள்களை, கூட்டுறவு நிறுவனங்கள் மூலமே வாங்கவேண்டுமென்று கூட்டுறவு பதிவாளர் உத்திரவு இருந்தும் அவர் தம் மைத்துனர் வாசுதேவன்மீது ஏஜெண்ட் எடுத்து “சாம்ராஜ் மில்ஸ்” ஆயில் என்ற பிண்ணாக்கு கம்பெனியிலிருந்து 10 இலட்சத்திற்குப் பிண்ணாக்கு வாங்கி 1 இலட்சம் லாபம் பெற்றிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைச் சுமத்த விரும்புகிறேன்.

1

அரக்கோணம் வட்டம், சித்தேரி கூட்டுறவு சொசைட்டியில் 1963 ஜூன் மாதம் குறுகிய கால நீண்ட கால