கலைஞரின் சட்டமன்ற உரைகள்
563
"மேலவையிலே உறுப்பினராவது இது முதல் முறையல்ல, 20ஆண்டுகளுக்கு முன்பு, 1952-ல் மேலவைக்கு சட்டப் பேரவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தேன், அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள ஒரு மாறுதலை நான் பார்க்கிறேன், அன்று முதியவர்கள் நிறைந்திருந்தார்கள், இளைஞர்களிலே ஒருவனாக நான் வந்தேன், இன்று இளைஞர்கள் நிறைந்திருக்கின்றார்கள். முதியவர்களில் ஒருவனாக நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னீர்கள், இப்போது உங்கள் பட்டியலில் நானும் ஒருவனாகச் சேர்ந்திருக்கிறேன். நானும் நாவலர் அவர்களும் சேர்ந்திருக்கின்றோம். தாங்கள் 1971 ஆம் ஆண்டு.
மாண்புமிகு மேலவைத் தலைவர் : என்னைவிட இளைஞர்தான் நீங்களும்.
கலைஞர் மு. கருணாநிதி : 1971 ஆம் ஆண்டு, மயிலாப்பூர் மக்கள் உங்களை மறந்துவிட்ட நேரத்தில், உங்கள் இல்லம் நாடி நானும் நாவலர் அவர்களும் வந்தபோது, எங்களுடைய கண்ணீரால் உங்கள் கன்னத்தைக் குளிப்பாட்டினோம். கடந்தகால வரலாறுகள் என்றைக்கும் பசுமையாக நினைவிலே இருக்கும் என்பதை நானும் மறந்துவிடவில்லை, நாவலர் அவர்களும் மறந்துவிட முடியாது முயற்சித்தாலும். தாங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த நேரத்திலே, தாங்கள் இந்த அவையினுடைய துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றபோது, இன்னொன்றையும் சொன்னீர்கள்.
“சட்டப் பேரவையிலே நான் இடம்பெறத் தவறிவிட்ட பின்னர், மாநில பார்லிமெண்டரி அரசியலிலிருந்தே ஒதுங்கத்தான் நான் விரும்பினேன். ஆனால் மக்கள் மத்தியிலே இருந்து தொண்டுபுரிய விரும்பினேன். நான் விரும்புகின்ற கொள்கையை இந்தப் பேரவை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே ஆளுங்கட்சியான தி.மு.க.வும், முதல்வர் கலைஞரும், அவரது அமைச்சரவையும், என் கருத்துக்களை நான் இந்த மன்றத்திற்கு வெளியே இருந்து சொல்வதைவிட, இந்த மன்றத்திலே வந்து சொல்வது மிகத் தேவை என்று எண்ணி, என்னுடைய உழைப்பு, இங்கு கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்று முதல்வர் கருதி, இந்த மாமன்றத்திற்கு என்னை வரவழைத்ததோடு இங்கு துணைத்