இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலைஞரின் சட்டமன்ற உரைகள்
577
களுடைய பாராட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னேன். அவ்வாறே, குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும், மேடையில் இருந்தவர்களும் கையொலி எழுப்பி அன்றைக்கே பாராட்டுத் தெரிவித்திருக்கின்றோம்.
அதுமாத்திரமல்ல. ஆளுநர் உரையிலே குறிப்பிடப்பட்ட அந்த வாசகங்களைக் கோடிட்டுக்காட்டி, திரு.சி.எஸ். அவர்க ளுடைய வீட்டிற்கு ஒரு ஆள் மூலமாகவே கவர்னர் உரையை அனுப்பி வைத்து, திரு.சி.எஸ்.அவர்களுக்கும் மற்றும் இருவ ருக்கும், யார் யார் ஆளுநர் உரையிலே பாராட்டப்பட்டார்களோ, அவர்களுக்கெல்லாம் அதை அனுப்பி வைத்திருக்கின்றேன். இவ்வளவுக்கும் பிறகு நான் பாராட்டவில்லையென்று சொன்னால், எப்பொழுதுமே என்னுடைய ஜாதகம் அப்படிப் பட்டது என்பதை மாத்திரம் சொல்லி அமைகின்றேன்.