பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

இரங்கல் தீர்மானங்கள்

டாக்டர் சுப்பராயனுக்கு இரங்கல் தீர்மானம்

உரை : 82

நாள் : 29.10.1962

கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதைப் போல், சிறைச்சாலையிலே மறைந்த மாவீரர்களின் செய்தியோடு, டாக்டர் சுப்பராயன் அவர்களும் மறைந்து விட்டார்கள் என்ற செய்தி எங்கள் இதயத்தைத் தாக்கியது. அவருடைய மறைவுக்காக ஆளும் கட்சித் தலைவர் அவர்கள் இந்த மன்றத்திலே கொண்டு வந்திருக்கின்ற இரங்கல் தீர்மானத்தை, இதய ஆழத்தில் வெளிப்படுகின்ற அன்பின் அடிப்படையிலே பாச உணர்ச்சியோடும், முழு மனதோடும் நான் ஆதரிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

அரசியல் பெருந்தகையாளர் டாக்டர் சுப்பராயன் அவர்கள் அந்தக் காலத்திலேயே அறிவியக்கத்திலே நல்ல ஈடுபாடு கொண்டு, அறிவியக்கத்தினுடைய தலைசிறந்த கொள்கையை கடைப்பிடித்து, அதிலும் முக்கியமாக ஆளும் கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல் கலப்புத் திருமணம் செய்து கொண்டு, தன் வாழ்க்கையை சீரிய முறையிலே நடத்திய பெருந்தகையாளர் ஆவார்கள். கலப்புத் திருமணம் போன்ற சமுதாய சீர்திருத்தங்களிலே அவருக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை, அவருடைய பல்வேறு நடவடிக்கை களிலே இருந்து நாடு நன்கு உணரும்.

டாக்டர் சுப்பராயன் அவர்கள் சமுதாய சீர்திருத்தத்திலே பற்று கொண்டது மாத்திரமல்ல. மொழியிலே நீங்காத பற்று