பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

57

நடைமுறையில் அப்படி நடைபெறுகிறதா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். ஈரோட்டின் அருகில் இருக்கும் பள்ளிப் பாளையத்தில் சேஷசாயி பேப்பர் மில் என்ற மில் ஒன்று துவக்கப்பட்டது. அதன் முதலீடு ஆறு கோடி ரூபாய். அந்த மில்லுக்குத் தேவையான ஆறு கோடி ரூபாயில் அதன் டைரக்டர்களாக இருப்பவர்கள், தனியார் துறையினர் தருவதாக வாக்களித்திருப்பது 20 அல்லது 25 இலட்சம். ஆனால் பொதுப் பணத்திலிருந்து ஸ்டேட் கவர்ன்மெண்டு, இண்டஸ்ட்ரியல் கார்ப்போரேஷன் இவைகளின் மூலமாகக் கொடுக்கப்படுகிற பணம் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். தனியார் துறை போடுகின்ற பணம் 25 இலட்சம்; பொதுப்பணத்திலிருந்து இண்டஸ்டிரியல் கார்ப்பொரேஷன், ஸ்டேட் கவர்ன்மென்ட் தருகிற பணம் ஐந்து கோடிக்கு மேல். 90 சதவிகிதம் பொதுப் பணத்திற்கு வழிகோலிவிட்டு, பிறகு தனியார் துறைக்குத் தருவானேன்

ன்

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : அதுபற்றிய உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். அதற்கு ஒரு கோடி ரூபாய் மெட்றாஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் கொடுத்திருக்கிறது; மூன்று கோடி ரூபாயை வொர்ல்டு பாங்கு மூலமாக வாங்கியிருக்கிறார்கள். ப்ரைவேட் எண்டர்ப்ரைசுக்குத்தான் வொர்ல்டு பாங்கியிலிருந்து கடன் கொடுப்பார்கள், நம்முடைய ராஜ்யத்தில் 70 டன் காகிதத் தொழிற்சாலை வரவேண்டும் என்பதற்காக எம்.ஐ.சி. மூலமாகப் பணம் கொடுத்திருக்கிறோம்.

கலைஞர் மு. கருணாநிதி : நான் ஆரம்பத்தில் இவ்வளவுதான் என்று திட்டவட்டமாகச் சொல்லவில்லை. 20 அல்லது 25 இலட்சம் அவர்கள் போட்டிருக்கக்கூடும் என்று சொன்னேன். அதேபோல் ஐந்து கோடி ரூபாய் பொதுப் பணத்திலிருந்து இருக்கக்கூடும் என்று சொன்னேன். எனக்குச் சரியான புள்ளி விவரம் தெரியாத காரணத்தால் அவ்வாறு சொன்னேன். ஆரம்பத்திலேயே உலக பாங்கிலிருந்து வாங்குகிற கடனை தனியார் துறைக்கு என்று வாங்காமல் பொதுத்துறைக்கு என்று சொல்லி வாங்கி ஏன் இந்த அரசு நடத்த முன் வந்திருக்கக்கூடாது?