இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
580
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
டாக்டர் சுப்பராயன் அவர்கள் மறையும் தறுவாயில், மாராட்டிய மாநிலத்தின் கவர்னராக இருந்து வந்தார். தமிழகத்திலே அவர் செய்து காட்டிய ஆற்றலையும், அவர் பெற்றுள்ள அறிவு மேம்பாட்டையும், அவர் கொண்டுள்ள நாட்டுப் பற்றையும் மராட்டிய மாநிலத்தில் பரப்புகிற நேரத்தில் திடீரென்று கலம் கடலில் கவிழ்ந்தது போல் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மறைந்து விட்டார் என்கின்ற சோகச் செய்தியை நாம் கேள்விப்பட நேர்ந்தது. அப்படிப்பட்ட பெரிய மனிதரை இழந்து தவிக்கிற அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய உற்றார், உறவினருக்கும், அன்பர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்ளுகிறது என்று கூறி, என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன். வணக்கம்.