பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

வேண்டுமென்ற எண்ணத்தில் நான் கலந்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்கள். அவர்களின் உடல் பாதிக்கப்பட்ட நேரத்திலே வெண்மணிச் சம்பவம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அந்தச் செய்தி அவர்களுடைய காதுக்கு எட்டியது முதல் மறுநாள் காலை 6 மணி வரை உண்ணாமல், உறங்காமல் தொலைபேசி மூலம் தஞ்சை அதிகாரிகளிடம் பேசுவதிலேயும், எங்களை உடனடியாக அங்கே சென்று நிலைமையை விசாரித்து அறியச் செய்வதிலேயும் நாட்டம் செலுத்தி, மனம் புழுங்கி, தூங்காமல் அந்த இரவெல்லாம் கழித்தார்கள். இனிய இளகிய, இரக்கம் கசியக் கூடிய இதயத்தைப் பெற்ற பேரறிஞர் இன்று நம்மிடத்திலே இல்லை. அவர்கள் விட்டுச் சென்ற அறிவுரைகள், அரசியல் பண்பு, நல்ல நெறிகள் கட்டிக் காக்கப்படவேண்டுமென்று கூறிய கடமை. கடமை. கண்ணியம், கட்டுப்பாடு இவற்றையெல்லாம் போற்றிப் பாதுகாக்கவும் அவர்கள் வழிநின்று செயல்படுவதுதான், மறைந்த அந்த மாமேதை, தமிழகத்தின் தவப்புதல்வனுக்கு நாம் செலுத்துகின்ற மரியாதை ஆகும் என்று கூறி, என்னுடைய கண்ணீரை உங்களுடைய சார்பில் அவர்களுடைய காலடிகளிலே அபிஷேகித்து, இந்த அளவிலே என்னுடைய வார்த்தைகளை முடித்துக் கொள்ளுகிறேன்.