பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சென்றோம், அவர்கள் தன்னுடைய நோய்ச் செய்தியைக் கேள்விப்பட்டு நாங்கள் வந்ததாகக் கருதாமல் திருமணத்திற்கு அழைப்பதற்காக வந்திருக்கிறோம் என்று கருதி, நேற்றே வாழ்த்து அனுப்பிவிட்டேன், உடல் நலம் சரியில்லை, வருவதற்கு முடிய வில்லை. ஆகவே, பொறுத்துக்கொள்ளவேண்டும்' என்று குறிப்பிட்டார்கள். பிறகு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்ட பொழுது, நானும், கல்வியமைச்சரவர்களும், மற்றவர்களும் பார்த்தபொழுது என்னுடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு அவர்கள் சொன்ன வார்த்தை, அவருடைய மக்களும், பேரப்பிள்ளையும், மருத்துவர்களும் சூழ்ந்திருந்த இடத்தில் சொன்ன வார்த்தை, இன்றைக்கும் என்னுடைய நெஞ்சிலே பதிந்துதான் இருக்கிறது. 'நம்முடைய நட்பை யாராலும், எந்தக் காலத்திலேயும் நீக்க முடியாது' என்று குறிப்பிட்டார்கள். என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு, 'உங்களை நான் கடைசி வரையில் கைவிட்டு விடமாட்டேன்' என்று சொன்னார்கள். இது 10,12, ஆண்டுக் காலமாக அவர்களுடன் பழகிய நேரத்தில், அவர்களுடைய பாச உணர்வினை, உள்ள உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட

எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். 62-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் முன்னேற்றக் கழகத்திற்கும், சுதந்திராக் கட்சிக்கும் தேர்தல் உடன்பாடு ஏற்பட முடியாமல் கடைசி நேரத்திலே உடைந்துவிட்டது என்றாலும், சில இடங்களில் அவர்கள் முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். அப்படி ஈடுபட்ட இடங்களில் ஒன்று 62-ம் ஆண்டு தஞ்சாவூரிலே என்னுடைய தொகுதியாகும்.

தனிப்பட்ட முறையிலேயும், கட்சி ரீதியிலேயும் அண்ணா அவர்களிடத்திலும், இன்றைக்கு அமைச்சர்களாக வீற்றிருக்கின்ற அனைவரிடத்திலும் அவர்கள் காட்டிய அன்பும், பரிவும் எத்தனை ஆண்டுக் காலமானாலும் எங்களால் மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் தமிழ்நாட்டினுடைய அரசியல் விமர்சனங்களை மாத்திரமல்ல, இந்தியப் பெருநாட்டுக்கான அரசியல் கருத்துக்களை மாத்திரமல்ல, அனைத்துலகத்திற்குத் தேவையான கருத்துக்களை எல்லாம் கூறியிருக்கிறார்கள். அனைத்து உலகத்திலும் பிரச்சினைகள் எழுகிற நேரத்தில் அதைப்பற்றி இராஜாஜி அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று உலகம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தது என்று சொன்னால்