இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலைஞரின் சட்டமன்ற உரைகள்
593
எடுத்துச் சொல்லும் நேரத்திலும் படபடப்புக்கோ, பரபரப் புக்கோ, பதைபதைப்புக்கோ ஆளாகாமல் நிதானமாகக் கருத்துக்களை எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். சில நேரங்களில் அவரையும் கூட கோபம் ஆட்கொள்ளுவ துண்டு. புயலாக மாறுவார்; ஆனால், அடுத்த கணமே தென்றலாக மாறும் மனப்பண்பு இருந்தது. அப்படிப்பட்ட பெருந்தகையாளரை இழந்திருக்கும் குடும்பத்தாருக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் ஆறுதல் கூறும் வகையில் வகையில் முன்னவர் இங்கே கொண்டு வந்திருக்கின்ற இரங்கல் தீர்மானத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்களும் இணைந்து வழிமொழிந்து அமர்கின்றேன். வணக்கம்.
அவை