பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

முன்னாள் அமைச்சர் இராமையாவுக்கு இரங்கல்

உரை : 86

நாள்: 13.08.1977

கலைஞர். மு. கருணாநிதி: தலைவரவர்களே! மறைந்த முன்னாள் அமைச்சர் இராமையா அவர்கள், இந்த மாமன்றத் தில் பத்தாண்டு காலம் ஆட்சிப்பொறுப்பைக் காங்கிரஸ் ஏற்றிருந்தபொழுது மிகத்திறம்பட தன்னுடைய அமைச்சர் பணியை ஆற்றிய ஒரு பெருந்தகை ஆவார்கள். 1957 முதல் 1967 வரையில் அவர்கள் இங்கே அமைச்சராகப் பணியாற்றிய பொழுது எதிர்க்கட்சி வரிசையிலே இருக்கின்ற வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன். அவர்கள் இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத்திலே மாணவர் பருவத்திலேயே பங்குபெற்றவர் என்பதை நம்முடைய அவையின் முன்னவர் அவர்கள் இங்கே எடுத்துக் கூறினார்கள். பங்கு பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளான நேரத்திலேயும் மனந்தளராமல் தியாகச் சுடர்களில் ஒருவராக அவர்கள் விளங்கினார்கள் என்பதையும் தமிழகம் நன்கறியும்.

1967க்குப் பிறகு அவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபட்டார். தமிழகத்தினுடைய காங்கிரஸ் கட்சியினுடைய தலைமைப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். அதன் பின்னர் குடியரசுத் தலைவருைை ஆட்சிக் காலத்தில் மாநில திட்டக் குழுவினுடைய துணைத் தலைவர் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பொறுப்பினையும் அவர் ஒழுங்குற நிறைவேற்றினார். அமைச் சராக இருந்த அந்தக் காலத்திலேயே எதிர் தரப்பிலே இருந்து எவ்வளவு ஆத்திரம் ஊட்டத்தக்க சொற்கள் அவரை நோக்கிப் பாய்ந்தாலும், மிகப் பொறுமையோடு பதில் கூறக்கூடிய ஒரு மனப்பக்குவத்தை அவர் பெற்றிருந்தார் என்பது அவரோடு பழகியவருக்கும், இந்த அவையில் அவர் இருந்த நேரத்தில்