பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

597

அவர்கள் சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டு எத்தனை முறை சிறை சென்றார் என்ற எண்ணிக்கைக் கணக்கு அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது. அந்த அளவிற்கு சிறைப்பறவையாக, இந்த தேச விடுதலைக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பெரியவர் மறைந்த சஞ்சீவரெட்டி அவர்கள். அவர்கள் இந்த மாமன்றத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய திருவுருவப் படத்தை, அன்னாள் முதலமைச்சர், என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களால் அழைக்கப்பெற்று, திறந்துவைத்த நேரத்தில், நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் இங்கே குறிப்பிட்டதைப்போல, எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருக்கின்ற இடத்தில் நானும், நான் அமர்ந்திருக்கின்ற இடத்தில் மாண்புமிகு அன்னாள் முதலமைச்சர் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும் அமர்ந்திருந்த நிலை, அப்போது காமராஜர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய இந்தியாவின் குடியரசுத் தலைவராக விளங்கிய சஞ்சீவரெட்டி அவர்கள் ஆற்றிய உரை முழுவதும் தனக்குக் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். அது விழா நிகழ்ச்சி என்ற காரணத்தால் சட்டமன்ற நடவடிக்கை ஏட்டில் பதிந்திருக்கப் பெறாமல் இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்த உரையின் சில பகுதிகளை அவர் பேசிய பகுதிகளை நான் தேடிஎடுத்து இந்த அவையினுடைய கவனத்திற்குக் கொண்டு வருவது நலன் என்றும் கருதுகின்றேன். பொருத்தம் என்றும் எண்ணுகிறேன். பெரிய பிரச்சினைகளை மாநிலங்கள் எப்படித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர் இங்கே ஆற்றிய உரையில், நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல, நாட்டிற்கு சமுதாயத்திற்குத் தேவையான அந்த அறிவுரையை ஒரு நிகழ்ச்சியின் மூலமாக அவர் சுட்டிக் காட்டினார். ".....Then there was a dispute about Tiruttani whether it should be in Andhra or in Tamil Nadu. As though it is going to Germany or America. Some such quarrel was there. Then Kamarajji one day told me - 'ஏதாவது பண்ணுவோம்ப்பா, இது என்ன ஒரு தாலுக்காவுக்காக சண்டையெல்லாம்' என்று பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சொன்னதைக் குறிப்பிட்டு விட்டு மேலும் சொல்கிறார். "...and then, Panditji one day came. He was just leaving me near my car, caught hold of my hand and said - 'What is this Sanjeevi?