பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

This is a small taluk. You are creating problems between Madras and Andhra'. I said - 'Panditji, you leave it to me and Kamarajji. If you have trust in us, you leave it to both of us and we will solve it'. It took a few months for us to solve it because we had to carry other people with us. Kamarajji had to carry the people of Tamil Nadu and I had to carry the people of Andhra also. Ultimately. you would not believe me, it was settled and I would not go into the details of how the dispute was settled. In the Andhra Assembly including the Opposition Leader, everybody supported the decision we took and the same thing happened in the Madras Assembly also. It was a unanimous decision. After all, Tiruttani had to come to Madras and other areas near Gummidipoondi had to go to Andhra. There was noth- ing wrong in it. There was no going out of India".

இதுதான் அவருடைய உரையில் மிக உன்னிப்பாக நாம் கவனித்து நெஞ்சில் பதிய வைத்துக் கொள்ளவேண்டிய சாராம்சமாகும். எதுவும் இந்தியாவை விட்டுப் போய்விடவில்லை; இங்கேயேதான் இருக்கிறது. இதற்கு நமக்குள் இவ்வளவு பெரிய போராட்டம் தேவையில்லை என்ற அந்தக் கருத்தை, எவ்வளவு அழகாக, நளினமாக இந்த அவையில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தபோது அவர் எடுத்துக்கூறினார் என்பதற்காகத்தான் நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

அது மாத்திரமல்ல. 'எமர்ஜன்ஸி' நெருக்கடிக்கால பிரகடனம் செய்யப்பட்ட நேரத்தில், அவர் எதிர் முனையிலேதான் இருந்தார். பெருந்தலைவர் காமராஜரும் அவ்வாறேதான். அப்போது பெருந்தலைவர் காமராஜரிடத்திலும், என்னிடத்திலும் தொடர்புகொண்டு, அடிக்கடி என்னைச் சந்திப்பது, திருமலைப் பிள்ளைத் தெருவிற்குச் சென்று பெருந்தலைவர் காமராஜரைச் சந்திப்பது, நெருக்கடி நிலையிலிருந்து இந்தியாவை மீட்க எப்படியெல்லாம் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிந்திப்பது, விவாதிப்பது, இவையெல்லாம் நிகழ்ந்த நேரம். நான் அப்போது அரசுப் பொறுப்பிலே இருந்த காரணத்தால், நெருக்கடி நிலையை எதிர்த்து, தமிழகத்திலேயுள்ள அமைச்சரவையே பதவி விலக வேண்டும் என்ற கருத்தை அவரிடத்திலே சொன்னபோது, “அவசரப்படாதே; பெருந்தலைவர் காமராஜரிடத்திலே கேட்டு