பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/604

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

603

என்று குறிப்பிட்டது. மறைந்த சென்னா ரெட்டி அவர்களுடைய பொன் மொழிகளே "No delay, no postponement" என்பதுதான். தாமதம் கூடாது, தள்ளி வைப்பதும்கூடாது என்பதைத்தான் அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அதைச் செயலிலும் காட்டிக் கொண்டிருப்பார்.

அவருடைய மறைவு எதிர்பாராத ஒன்று என்பது மாத்திர மல்ல, அவருடைய இல்லத்திலே ஒரு இனிய நிகழ்ச்சியிலே அவர் எங்களையெல்லாம் அழைத்தபோது சென்று, வாழ்த்தி, அவரோடு அமர்ந்து விருந்துண்டு, சென்னைக்குத் திரும்பிய பிறகு, இன்னொரு இனிய நிகழ்ச்சி அடுத்த நாள் நடைபெற இருக்கின்ற அந்தக் காலக்கட்டத்தில், இடையிலே அவர் மறைந்தார் என்ற துயர நிகழ்ச்சி, செய்தியாக வெளிவந்தது. முதலிலே பேத்திக்கும், அடுத்து பேரனுக்கும் திருமணம் நிச்சயித்து, நாள் குறித்து அழைப்பிதழ் எல்லாம் அனுப்பி வைத்துவிட்டு, பேத்தியினுடைய திருமணத்தை மிகுந்த உற்சாகத்தோடு நடத்தி முடித்துவிட்டு, எங்களையெல்லாம் வரவேற்று, பிறகு வழிஅனுப்பி வைத்துவிட்டு, பேரனுடைய திருமணம் நடைபெற இரண்டு நாட்கள் இருக்கும்போது இடையிலே அவர் திடீர் என்று மறைந்தார் என்பது, அந்தக் குடும்பத்தை எந்த அளவுக்கு உலுக்கக்கூடிய செய்தி என்பதை நாமெல்லாம் மிக நன்றாக அறிவோம். நல்ல போர் வீரராக, தளகர்த்தராக, நல்ல நிர்வாகியாக, நல்ல மனம் படைத்தவராக, எல்லாவற்றுக்கும் மேலாக எதையும் தாங்கும் இதயம் கொண்டவராக விளங்கிய சென்னாரெட்டி அவர்களுடைய மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும். அந்த இழப்பை எண்ணி, அவருடைய மனைவியார், மக்கள் அனைவருக்கும், குடும்பத்தாருக்கும் நம்முடைய ஆழ்ந்த இரங்கலை இந்த அவையின் வாயிலாகத் தெரிவித்து, வாழ்க சென்னா ரெட்டி அவர்களுடைய புகழ் என்று கூறி, அமர்கின்றேன். வணக்கம்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பெரியாருக்குத் தொண்டராக, பேரறிஞர் அண்ணா அவர்களுக்குத் தம்பியாக எங்களுக்